பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவாசகம் - சில சிந்தனைகள் போன்றது. இறையனுபவம் என்பது ஏற்படும்போது இந்த எல்லைகள் தகர்ந்து போகின்றன. மனித உடல் அமைப்பு, மனத்தின் எல்லை இவற்றையெல்லாம் கடந்து, முழுவதுமாக அந்த மனிதனை ஆட்கொண்டு இன்பம் தருவது ஆதலால், இறை அனுபவத்தை 'இன்ப வெள்ளமே என்றார். அத்தா' (தந்தையே) என்பது அவனுடைய கருனைப் பெருக்கை நினைத்ததால் உள்ளத்தில் தோன்றிய இன்பத்தின் விளைவாக வெளிப் பட்ட ஒரு சொல்லாகும். அத்தா என்ற சொல் உரிமையையும்,அண்மையையும், எளிமையையும் கூறுகின்ற சொல்லாம். இப்போது அனுபவம் கைக்கு எட்டியதால் அதனைத் தந்தவனை அத்தா என்று அழைத்துவிட்டார். அந்தச் சொல்லின் மூலம் தமக்கும். அவனுக்குமுள்ள உறவை, உரிமையைத் தம்மையும் அறியாமல் கூறிவிடுகிறார். அப்படிக் கூறிய உடனேயே அவரையும் அறியாமல் அவருடைய உள்ளத்தில் ஒரு அச்சம் புகுந்துவிடுகிறது. ஏற்கனவே எத்துணைப் பெரியவன் அவன் என்பதை அறிந்திருந்தும் எளிமையாக, உறவுகொள்ள துணிந்துவிட்டோமே என்ற எண்ணம் தோன்றியதுபோலும்! எனவே 'மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளி' என்று பாடுகிறார். பல்வேறு வடிவாகத் தோன்றுகின்ற இப்பிரபஞ்சம் அணு முதல் அண்டம் வரை சிறியதும், பெரியதுமாகவும், பேராற்றல் படைத்ததாகவும், ஆச்சரியத்தோடுக.டிய தோற்றத்தை நம் காட்சிக்கு நல்குகிறது. மாறுபட்டு நிற்கின்ற இப்பொருள்களுக்கிடையே சுடரொளியாய்க் காட்சி தருபவன் இறைவன். எனவே, அவனுடைய எட்ட முடியாத பெருமையைக் கூறும்போது அத்தா என்று சொல்லிய உறவு முறையில் ஏற்படும் சிறு தவறு நீங்கி விடுகிறது. இவ்வாறு கூறுவதற்கு அடிகளாரின் பல பாடல்கள் உதவுகின்றன.