பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திருவாசகம் - சில சிந்தனைகள் இறைவன் உரைகளேயாகும் என்ற கருத்தை வலியுறுத்தக் காணலாம். ஞானசம்பந்தரைவிட்டு அப்பர், சுந்தரர் ஆகிய இருவரையும் பார்ப்போமேயானால், இவர்கள் பாடல்கள் இறைவன் புகழ்பாடுவதாக அமைந்துள்ளனவே தவிரப் புதிய வழியில் செல்லவில்லை. இந்தக் கருத்தை மனத்தில் பதித்துக்கொண்டு எட்டாந் திருமுறை என்று சொல்லப் படும் திருவாசகத்தில் நுழைவோமேயானால், அதிலுள்ள அறுநூற்றுச் சொச்சம் பாடல்களும் தேவாரங்களின் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டுச் செல்வதைக் காணலாம். மூவர் முதலிகள் இறை அனுபவத்தில் தோய்ந்தவர்கள் என்றாலும், அந்த அனுபவம் எப்படி இருந்ததென்பதைத் தெரிவிக்கவில்லை. பக்தி உணர்வு, இறைவனின் அளப்பரும் பெருமை, தங்களுடைய சிறுமை, இறைவன் தங்கள்மாட்டுக் காட்டிய கருணை என்பவை எல்லாம் தேவாரங்களில் இடம் பெற்றுள்ளன என்பதில் ஐயமில்லை. மனிதர்களுடைய வாழ்வுமுறையில் அறிவு, உணர்வு என்ற இரண்டும் செயற்படுவதைக் காணலாம். அறிவு முயற்சியின்பாற்பட்டது. பொருளைப் பகுத்து உணர்ந்து ஆய்வு செய்யும் இயல்புடையது அறிவு. ஆனால், உணர்வு அப்படி அன்று. அங்கு ஆய்வுக்கு இடமே இல்லை. காத்ல், இன்பம் முதலிய உணர்வுகளுக்குக் காரண காரியம் இல்லை. என்றாலும், காதலில் ஏற்படும் அனுபவங்களைக் கூட இன்னொருவருக்கு இன்னவிதமாக இருந்தது என்று எடுத்துச் சொல்ல முடியாது என்று நம்மவர் கூறினர். ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. உண்மைக் காதலுணர்வில் நான் என்பது அறவே அழிந்துவிடுகிறது. ஈருடல் ஒருயிர்' என்று சொல்கிற மரபு இதுபற்றி வந்ததேயாகும். அதேபோலத்தான் பக்தி உணர்விலும் நான் கரைந்து விடுகிறது. இந்தப் பக்தி உணர்வுக்குக் கல்வி, கேள்வி,