பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 121 ஈறுஇலாதநீ எளியை ஆகிவந்து ஒளிசெய் மானுடம் ஆகநோக்கியும் (திருவாச :5-91) என்றும், வந்து எனைப் பணிகொண்டபின் மழக் கையிலங்கு பொற்கிண்ணம் என்றுஅலால் அரியை என்று உனைக் கருதுகின்றிலேன் (திருவாச :5-92) என்றும் பின்னர் பாடுகின்றார். ஆதலால் மிக்காய் நின்ற தோற்றச் சுடரொளி' என்பதற்கு இவ்வாறு பொருள் கொள்வதில் தவறு இல்லை என்று தோன்றுகிறது. சொல்லினால் வடித்து இத்தகையது என்று கூற முடியாத நுண்மையான உணர்வைத் தெரிவிப்பதுதான் சொல்லாத நுண் உணர்வாய்' என்பதாகும். மாற்றம்ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவுஆம் தேற்றனே தேற்றத்தெளிவே என்சிந்தனையுள் ஊற்று ஆன உண்ணார் அமுதே உடையானே (81-83) கணந்தோறும் மாறுபடும் இயல்புடையது இந்த வையகம். இந்த வையகத்தினுள்ளே தோன்றும் உயிர்கள், உயிர்களின் அறிவு நிலை என்பவையும் மாற்றத்திற்கு உட்பட்டவையே ஆகும். நேற்று மெய்ம்மை என்று காணப் பட்ட ஒன்று இன்று பொய்ம்மை ஆகிவிடுகிறது. அறிவு வளர்ச்சியில் காணப்படும் விஞ்ஞானப் புதுமைகள் இந்தச் சட்டத்திற்குப் புறம்பானவையல்ல. எத்தனையோ விஞ்ஞானப் புதுமைகள் அடுத்த பத்தாண்டுகளில் மாற்றம் பெற்று விடுவதோடு அல்லாமல் தவறானவை என்ற முடிவுக்கும் செலுத்தப் பெற்றுள்ளன. ஆகவே, மாறுபாட்டை இயல்பாகக் கொண்ட இந்த வையகத்தில் அறிவைப் பொறுத்தமட்டிலும் இன்று மெய்ம்மை என்று