பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருவாசகம் - சில சிந்தனைகள் கூறப்பெற்றவற்றுள் சில, நாளை மறுப்புக்கு உட்படு கின்றன. எனவே வையகம், அதில் தோன்றி வாழும் உயிர்கள், அந்த உயிர்களிடம் வளரும் அறிவு ஆகிய அனைத்தும் நிலைபேறு இல்லாதவை; மாறுபடும் இயல்புடைய சிறப்பைப் பெற்றுள்ளவை ஆகும். இத்தனை மாறுபாடுகளிலும், இத்தனை மாற்றங்களிலும் மாறு படாமல் தெளிவான முடிவு என்று சொல்லக்கூடிய ஒன்று உண்டா என்றால் உண்டு என்கிறார் அடிகளார். பிரபஞ்சமும், மனிதனும் மாறிக்கொண்டுவரும் இயல்பைப் பெற்றிருப்பதுபோல, மனிதடைய அறிவும் மாறிக் கொண்டு வரும் இயல்புடையது. இதனை விஞ்ஞான வளர்ச்சி கூறுகிறது. இந்த அறிவு வளர்ச்சியில் முடிவான பொருள் இது என்று கூறப்பட்ட அணு, அடுத்த பத்தாண்டுகளில் பல்வேறு சிறு துகள்களாக உடைக்கப் பட்டது. ஆகவே, அறிவு வளர்ச்சியில் அணு என்ற நிலையும், அணு பிளக்கப்பட்ட நிலையும் இயல்பானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. அப்படியானால் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து வளரப்போகும் அறிவு இன்று மெய்ம்மை என்று சொல்பவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா என்றால் விடை கூறுவது கடினம். வையகமும், அறிவும் மாற்றத்தை இயல்பாகப் பெற்று உள்ளன. என்றாலும் இந்த மாறுபடுகளுக்கிடையே மாறுபாடு இல்லாத ஒரு பொருள் உண்டென்றால் அதுதான் இறைப்பொருளாகும். - அறிவில் பிறந்த தெளிவின் பயனாகக் காணப்பெற்ற இப் பொருளுக்கு, வேறுபல இலக்கணங்களையும் அடிகளார் அருளிச்செய்கிறார். இப் பொருளை வெற்றறிவின் துணைக்கொண்டு ஆராய்ந்து காணவில்லை என்கிறார். ஏனென்றால், மாறுபடும் அறிவால் காணப் படும் பொருள் மாறக்கூடுமன்றே. எனவே, அதனை