பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 123 மறுத்து சிந்தனையின் - ஆழ்மனத்தின் - அடித்தளத்தில் ஊற்றான அமுதே என்கிறார். ஊற்றான என்று கூறுவதன் நோக்கம் ஒன்றுண்டு. புறத்தே காணப்படாத தண்ணிர், நிலத்தைத் தோண்டியவுடன் வெளிப்பட்டு வருதல்போல ஆழ்மனதின் அடியேயுள்ள அமுதாகிய இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுகிறான் என்கிறார். சிந்தனையுள் ஊற்றாய் ஒருவன் வருகிறான் என்றால் முன்னரே அந்தச் சிந்தனை அடித்தளத்தில் அவன் இருந்திருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட பொருளைத் தெவிட்டாத அமிழ்து போன்றவன் என்கிறார் அடிகளார். வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் எம் ஐயா அரனேஓ என்று என்று 84-85) இதுவரை அடிகளார் உடம்புபற்றிச் சிறிதுகூடக் கவலைப்படவில்லை; வெறுக்கவும் இல்லை. காரணம் இந்த உடம்போடு இருந்த அவருக்கு, குரு தரிசனம் கிடைத்தது. சிவானுபவமும் கிடைத்தது. அந்த அனுபவம், பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு, மனம், அறிவு என்பவற்றையெல்லாம் கடந்து நின்றது. அடிகளாருக்கு, இந்த அனுபவம், முழுவதுமாகக் கிடைத்தபின்னர், தில்லைக்கூத்தன் இந்த அனுபவத்தை அகற்றிவிடுகிறான். திடீரென்று சராசரி மனித நிலைக்கு வந்துவிடுகிறார் அடிகளார். அந்த அனுபவம் தம்மைவிட்டுப் போனதற்கு இந்த உடம்புதான் காரணம் என்று நினைக்கின்றார். அனுபவத்தில் ஆழ்ந்து நின்றபோது திருவாதவூரருக்குத் தம் நினைவோ, தம் உடம்புபற்றிய நினைவோ இல்லவே இல்லை. இதனையே அருணகிரிநாதப் பெருமான், "இறந்தே விட்டது இவ்உடம்பே (கந்தர்அலங்காரம்-19) என்றும், ‘என்னை இழந்த நலம் சொல்லாய்” (கந்தர்அனுபூதி - 2) என்றும் கூறுகின்றார். சிவானுபவ இன்பம் தம்மைவிட்டு நீங்கினதற்குக் காரணம் உடம்பு