பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 125 நள் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனாகக் காட்சி தருகின்றான் அவன். இறைவன் சோதி வடிவினன். அப்படி இருக்க, அவன் நட்டம் பயிலும் இடத்தில் இருள் எங்கிருந்து வந்தது: இங்கே இருள் என்பது புற இருளை அன்று மனத்திலுள்ள அவித்தையாகிய அஞ்ஞான இருளையேயாகும். இந்த அஞ்ஞானத்தைக் காட்டத்தான் ஆழ்மனத்தின் அடித்தளத்தில் ஓயாது நடனம் ஆடிக் கொண்டிருக்கிற பெருமானைச் சிந்தனைக்குக் கொண்டு வரும்போது, ஒளி வடிவினனாகிய அவனும், இந்த அஞ்ஞானம் ஆகிய இருளும் நினைவு வரவே, ‘நள் இருளில் நட்டம் பயின்றாடும் நாதனே என்றார். தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லல் பிறவி அறுப்பானே ஒ என்று (90–91) தில்லையில் கூத்தாடும் பெருமானாகவும், மதுரையில் அடியார்க்கு அருள் செய்பவனாகவும், பாண்டி நாடே பழம்பதியாகக் கொண்டவனாகவும் உள்ள பெருமானைக் கூவி அழைக்கும்போது அவன் தனி இயல்பை அடிகளார் இங்கே கூறுகின்றார். அல்லற்பிறவி அறுக்கின்றவன் அவன் ஒருவனே தான். இறைவழிபாடு செய்பவர்களில் பெரும் பான்மையினர் நீண்டிருப்பதும், இடையே தோன்றியதும் ஆகிய தங்கள் துன்பங்களைப் போக்கவேண்டுமென்று இறைவனிடம் விண்ணப்பம் செய்துகொள்வது மரபு. விண்ணப்பம் செய்யப்பெற்ற அல்லல்கள் இறையருள் காரணமாக ஒருவேளை தீர்ந்துவிட்டாலும், அடுத்த பல அல்லல்கள் காலியான இடத்தை தாங்கள் வந்து நிரப்பிவிடும். ஆகவே, தனித்தனியாக அல்லல்களைப் போக்கவேண்டுமென்று ஒவ்வொருமுறையும் இறைவனை வேண்டுவது பெரியோர்கள் செயலன்று. அல்லல்கள் அனைத்தையும் ஒருசேரப் போக்கவேண்டுமென்று தினைப்பவர்கள் முதலில் செய்யவேண்டியது ஒன்றுண்டு