பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 திருவாசகம் - சில சிந்தனைகள் நோயைக் கண்டவுடன் நோய்முதல் நாடுவதுபோல, நம் அல்லல்களுக்குக் காரணம் எது என்பதை ஆராய்ந்தால் பிறவியே எல்லாத்துயரங்களுக்கும் மூலமாக உள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம். எனவேதான் தம்முடைய அல்லல்களை அறுக்கவேண்டுமென்று வேண்டாமல் அல்லல்களுக்கு எல்லாம் மூலமாக உள்ள பிறவிப்பிணியைப் போக்க வேண்டுமென்ற கருத்தில் அல்லற் பிறவி அறுப்பானே’ என்கிறார் அடிகளார். அல்லற் பிறவி என்பதை அல்லலைத் தரும் பிறவி என்று இரண்டாம் வேற்றுமையாகவும், அல்லலுக்கு இடமான பிறவி என்று நான்காம் வேற்றுமையாகவும் விரித்துப் பொருள் கொள்ளாமல் அல்லலாகிய பிறவி என்று அல்வழியாகப் பொருள் கொள்வது சிறப்புடையது. சொல்லற்கு அரியானைச் சொல்லி திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. (92–95) இங்கே பாட்டின் பொருள் என்பது பதவுரை, பொழிப்புரை அன்று. இதனை அடிகளார் மனத்தில் கொண்டிருந்தால் சொல்லிய பாட்டின் பொருள் அறிந்து என்று கூறியிருப்பார். அறிதல் அறிவின் தொழில்; பதவுரை, பொழிப்புரை முதலியன காண்பது அறிவின் தொழிலேயாகும். ஆனால், அடிகளார் இங்கே பயன்படுத்திய சொல், சொல்லிய பாட்டின் பொருள் 'உணர்ந்து என்பதாகும். பாட்டின் பொருளை அறிதல் வேறு, உணர்தல் வேறு. உணர்ந்து சொல்லுதல் என்பது பாடுபவன், பாடுதலாகிய செயல், பாடும் பாட்டு ஆகிய மூன்றும் ஒன்றாக ஆகின்ற நிலையைக் குறிப்பதாகும். வள்ளலார், நான் கலந்து பாடுங்கால்’ என்று கூறியதை