பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 127 முன்னரே குறித்துள்ளோம். ஆக, சொல்லிய பாட்டின் பொருளை, அறிந்து தெளிதல்பற்றிப் பேச்சே இல்லை. உணர்ந்து சொல்லுதல் என்பது பாடுகிறவன் தன்னை மறந்து பாடுதலாகும். அதாவது நான் என்ற உணர்வு இழந்து, பாடல், அது தரும் அனுபவம், அதனை அனுபவிக்கின்ற தான் என்ற மூன்று நிலையையும் கடந்து அனுபவம் ஒன்றாகவே நிற்கக் கூடுமானால், அப்படி நிற்கின்றவர்கள் சொல், பதம் கடந்து நிற்கின்ற பெருமான் திருவடிக்கீழ்ச் செல்ல முடியும். அறவாநி ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க'(பெ.பு:காரை-60 வேண்டும் என்று காரைக்கால் அம்மையார் வேண்டிக் கொண்டதை நினைவு கூர்வார்போல திருவடிக் கீழ் செல்வர்' என்கிறார் அடிகளார். சிவபுரம் என்பது வேறு எங்கோ இருப்பது அன்று. திருவடிக் கீழ்ச் இருப்பதையே சிவபுரத்தின் உள்ளார்’ என்று குறிப்பிடுகிறார். கடைசியாக உள்ள அடி, பல்லோரும் ஏத்தப் பணிந்து என்பதாகும். இதனை, செல்வர் என்ற சொல்லுக்கு அடையாக்கி அயல்நின்றார் அனைவரும் பணிந்து ஏத்தச் சிவனடிக் கீழ்ச் செல்வர் என்று பொருள் கூறலாம். இவ்வாறு கொள்ளாமல் பணிந்து என்பதை செல்வர்க்கு அடையாக்கி, சொல்லப் பெறும் பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார், பல்லோரும் ஏத்தச் சிவபுரம் பணிந்து செல்வர் என்றும் பொருள் கொள்ளலாம். இந்தப் பணிந்து’ என்ற சொல்லை செல்வர் என்ற சொல்லுக்கு அடையாக்கக் காரணம் ஒன்று உண்டு. மனித மனம் கடைசிப் படியில் நிற்கும்போதுக.ட வழுக்கி விழுகின்ற இயல்புடையது. சொல்லிய பாட்டின்