பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கீர்த்தித் திருஅகவல் தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுயி ரெல்லாம் பயின்றன னாகி எண்ணில் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் என்னுடை இருளை ஏறத் துரந்தும் அடியார் உள்ளத் தன்புமீ தூரக் குடியாக் கொண்ட கொள்கையுஞ் சிறப்பும் மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் கல்லா டத்துக் கலந்தினி தருளி நல்லா ளோடு நயப்புற வெய்தியும் பஞ்சப் பள்ளியிற் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நற்றடம் படிந்தும் கேவேட ராகிக் கெளிறது படுத்தும் மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும் மற்றவை தம்மை மகேந்தி ரத்திருந்து உற்றஐம் முகங்க ளால்பணித் தருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரிய னாயமர்ந் தருளியும் வேறுவே றுருவும் வேறுவே றியற்கையும் நூறுநூ றாயிரம் இயல்பின தாகி ஏறுடை ஈசன்இப் புவனியை உய்யக் 10 15 20 25