பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் - 5 அறிவு ஆகியவை இருக்க வேண்டிய நியதி இல்லை. இவை இல்லாமலும் பக்தி உணர்வு முழுவதுமாக ஒருவனை ஆட்கொள்ள முடியும் என்பதை முதன் முதலில் கண்டவர்கள் தமிழர்கள். கண்ணப்ப நாயனார் வரலாற்றில், தன்பரிசும் வினைஇரண்டும் சாரும்மலம் மூன்றும்அற அன்புபிழம்பு ஆய்த்திரிவார் (பெ.பு கண்:154) என்று கண்ணப்பரைச் சேக்கிழார் கூறுகிறார். அன்பு என்பதற்கு, ஒரு முழு இலக்கணமாக விளங்குபவர்தான் கண்ணப்பர். ஆனால், தான் பெற்ற அனுபவத்தை எடுத்துப் பிறருக்குச் சொல்லும் வாய்ப்போ, அதற்கேற்ற ஆற்றலோ திண்ணனாருக்கு இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் ஆறு நாளில் முழுமையாக திண்ணனார் கண்ணப்பராக மாறி, இறைவன் பக்கத்தில் நிற்கின்ற பேற்றைப் பெற்றார். அவருடைய செயல்களை மறைந்து நின்றுகொண்டிருந்த சிவ்கோசரியார் ஒருவர்தான் பார்க்க முடிந்தது. அவர்கடிடக் கண்ணை எடுத்து அப்பியதைக் கண்டாரே தவிர, திண்ணன் என்ற வேடன் கண்ணப்பராக எப்படி மாறினான் என்பதை அறிய வாய்ப்பு இல்லை. திண்ணனார் வாழ்ந்த ஆறு, ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திண்ணனுக்குக் கிடைத்த அனுபவத்தை அவர் பாடலாகப் பாடியிருந்தால் ஏனையோருக்கும் அது பயன்படுமே என்று காளத்திநாதன் கருதினான்போலும்; அதற்காகவே திருவாதவூரரைப் படைத்தான். குழந்தைகள் அன்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால், அதனை எடுத்துச்சொல்லும் சக்தி அவற்றிடம் இல்லை. அந்தச் சக்தி அறிவின்பாற்பட்டதாகும். சிறந்த கல்வி அறிவு, அனுபவ அறிவோடு திருவாதவூரர் இருக்கிறார்.