பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் 131 பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வ னாகிக் கருவார் சோதியிற் கரந்த கள்ளமும் பூவல மதனிற் பொலிந்தினி தருளிப் பாவ நாசம் ஆக்கிய பரிசும் தண்ணிப் பந்தர் சயம்பெற வைத்து நன்னிச் சேவகன் ஆகிய நன்மையும் விருந்தின னாகி வெண்கா டதனிற் குருந்தின் கீழன் றிருந்த கொள்கையும் பட்ட மங்கையிற் பாங்கா யிருந்தங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவ னாகி வேண்டுருக் கொண்டு காடது தன்னிற் கரந்த கள்ளமும் மெய்க்காட் டிட்டு வேண்டுருக் கொண்டு தக்கா னொருவன் ஆகிய தன்மையும் ஒரி யூரின் உகந்தினி தருளிப் பாளிரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலங் கொண்ட கொள்கையும் தேனமர் சோலைத் திருவா ரூரில் ஞானந் தன்னை நல்கிய நன்மையும் இடைமருது அதனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்தஅப் பரிசும் ஏகம் பத்தின் இயல்பா யிருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசும் திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 55 60 65 70 75