பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் 133 அழுக்கடை யாமல் ஆண்டுகொண் டருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண் டருளியும் மூல மாகிய மும்மல மறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும் அரியொடு பிரமற்கு அளவறி யாதவன் பரிமா வின்மிசைப் பயின்ற வண்ணமும் மீண்டு வாரா வழியருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி யாகவும் பத்திசெய் அடியரைப் பரம்பரத் துய்ப்பவன் உத்தர கோச மங்கையூ ராகவும் ஆதி மூர்த்திகட் கருள்புரிந் தருளிய தேவ தேவன் திருப்பெயராகவும் இருள்கடிந்தருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை யருள்மலை யாகவும் எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி நாயி னேனை நலமலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித் தருளி . அன்றுடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந் தருளியும் எய்தவந் திலாதார் எரியிற் பாயவும் மாலது வாகி மயக்க மெய்தியும் பூதல மதனிற் புரண்டுவீழ்ந் தலறியும் கால்விசைத் தோடிக் கடல்புக மண்டி 110 甘5 120 125 130 135