பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவாசகம் - சில சிந்தனைகள் இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு பார்த்தால் கீர்த்தித் திருஅகவலில் சொல்லப்பெற்ற அந்நிகழ்ச்சிகள் அனைத்தும் அவன் செய்த விளையாடல்களே என்பது நன்கு விளங்கும். தில்லைமூதுர் ஆடிய திருவடி பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி (1–2) மிகப் பழைமையான தில்லை மூதூரில் யாவரும் காண ஆடிக்கொண்டிருக்கும் அத்திருவடி, முக்காலத்தும் எல்லா விடத்தும் தோன்றிய, தோன்றுகின்ற, தோன்றப் போகும் எல்லா உயிர்களிடத்தும் நெருங்கிய உறவு கொண்டுள்ளது. இறைவன் திருவடியைக் குறிக்கவந்த அடிகளார் தில்லை மூதூரில் ஆடிய திருவடி என்று குறிப்பது ஏன் என்ற வினாவை எழுப்பினால், நல்ல முறையில் விடை கிடைக்கும். உலகிடை வாழும் நால்வகைப்பட்ட உயிரினங்கள் பல்வேறு உடம்புடன் வாழ்கின்றன. ஊர்வன, பறப்பன, நீந்துவன, நடப்பன ஆகிய அவற்றை நாம் புறக்கண்களாலேயே காணமுடியும். ஆனால், அந்த ஒவ்வோர் உடம்பினுள்ளும் உள்ள உயிரைக் காணுதல் இயலாத காரியம். உயிரையே காண இயலாதென்றால் அவ்வுயிரினுள் உயிராய் உறையும் இறைவனைக் காண்டல் இயலவே இயலாதென்பது பெறப்படும். பொறி, புலன்களுக்கு எட்டாத ஒன்று உயிர் அந்த ஒன்றுக்குள் ஒன்றாய் இருப்பது இறைவன் திருவடி அப்படியானால் கருத்தளவை மாத்திரத்தில் இதனைக் கொள்ளலாமே தவிர, அப்படிப்பட்ட ஒன்றினிடம் சாதாரண மனிதமனம் சென்று பற்றாது. எனவே, நம் போன்ற மந்தமதிகள்பால் கொண்ட அன்பு காரணமாக அந்தப் பொருளை நாம் அறிய ஓர் எளியவழி கூறுகின்றார் அடிகளார். உயிர்களின் உள்ளே தேடிக்கான முடியாத ஒன்றை அறிய வேண்டுமானால் கட்புலனால் காணக்கூடிய முறையில் அதனை வெளிக்கொணர