பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 137 வேண்டும். எனவே, இப்பிரபஞ்சத்திலுள்ள பல்லுயிர் களிலும் கலந்து நிற்கின்ற பொருளைக் கட்புலனால் காணவேண்டுமா? இதோ, தில்லை மூதூரில் ஆடிக் கொண்டிருக்கும் திருவடியைப் பார்; இதுதான் எல்லா உயிர்களிலும் உறைகின்றது என்ற கருத்தைத்தான் முதல் இரண்டு அடிகள் விளக்குகின்றன. ஆடிய திருவடி பயின்றன’’ ஆகி என்று கூறுவதற்குப் பதிலாக பயின்றனன் என்று உயர்திணை வாய்ப் பாட்டால் கூறியமையின், திருவடியே இறைசொரூபம் என்ற கருத்தைப் பெறவைக்கிறார். திருவடியை ஆகுபெயர் ஆகக் கொள்வதைக்காட்டிலும் திருவடியே இறைவன் என்று கொள்வது சிறப்புடையதாகத் தோன்றுகிறது. எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி மண்ணும் விண்ணும் வானோர் உலகும் - துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் (3-5) மூன்றாம் அடியிலுள்ள குணம் என்பது ஆற்றல் என்ற பொருளையுடையது. குணம் கடந்தவன் இறைவன் என்று மரபுவழியாகச் சொல்லிக்கொள்வதற்கு, இங்குள்ள குணம் என்ற சொல் முரண்படுமேயென்று சிந்திக்கத் தேவையில்லை இங்குக் குணம் என்று கூறப்பெறுவது ஆற்றலையே ஆகும். 'கணக்கிலடங்காத பல்வேறு ஆற்றல்களும் இயல்பாக விளங்கித் தோன்ற என்பது இவ்வடியின் பொருளாகும். இறைவனது பல்வேறு ஆற்றல்களும் அவனிடமிருந்து பிரிக்கமுடியாத தன்மைகள் ஆகும். வேறுவகையாகக் கூறவேண்டுமேயானால், உலகிடை நாம் காண்பதுபோல ஆற்றலையுடையவன் (குணரி, அவனிடம் காணப்பெறும் ஆற்றல் (குணம்) என்பதுபோன்று இங்குப் பொருள்காண முடியாது. காரணம், இறைவனே ஆற்றல் வடிவாக உள்ளான். ஏனையவற்றிற்குச் சொல்லும் குணா-குணி பாவம் இங்குப் பொருந்தாது என்க. பல்குணம் இயல்பாகவே | 0