பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 திருவாசகம் - சில சிந்தனைகள் விளங்கி நிற்கின்றது என்பதால் அவனிடமிருந்து இந்த ஆற்றலைப் பிரித்துக் காண்பது இயலாது என்க. மண், விண், வானோர் உலகு என்று கூறியதால் விண் என்பதற்கு வழக்கமாகக் கொள்ளும் தேவருலகம் என்று பொருள்கூற முடியாது. மாபெரும் விஞ்ஞானியாகிய அடிகளார் மண் என்று நாம் வாழும் உலகையும், நம் சூக்கும உடம்புடன் சென்று வாழும் வானோர் உலகையும் (தேவருலகையும் கூறியபின்னர், விண்’ என்ற ஒரு சொல்லைப் பெய்கின்றார். எல்லை d#5fTGjijf முடியாததாகிய இப்பிரபஞ்சத்தில் மண்ணுலகு, வானோர் உலகுபோன்ற பல உலகுகள் இருக்குமாதலின் அவற்றைக் குறிக்க விண் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். இவ்வுலகங்களில் வாழும் உயிர்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் தத்தம் கருத்தைப் பரிமாறிக் கொள்கின்றன; கருத்தைப் பரிமாறிக்கொள்வதற்கு (communication) பெரும்பாலும் ஒலியையே பயன்படுத்து கின்றன. இவ்வொலி சொல்வடிவு, பொருள்வடிவு என்ற இரு கூறாக அமைந்துள்ளது. இதனைச் சொற் பிரபஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம் என்றும் கூறுவர். இங்கே கல்வி என்று அடிகளார் குறிப்பது இந்தச் சொல், பொருள் என்ற இரண்டு பிரபஞ்சங்களையுமே ஆகும். மண், விண், வானோர் உலகு ஆகியவற்றையும், அவற்றுள் வாழும் எண்ணிறந்த உயிர்களையும் படைத்த பரம்பொருள், அவை வளர்ச்சி அடைவதற்கும், கூடிவாழ் வதற்கும் ஏதுவாகச் சொற் பிரபஞ்சத்தையும், பொருட் பிரபஞ்சத்தையும் தோற்றுவித்துப் பின்னர் அவற்றை அழித்தும்விடுகிறான். படைப்பில் உயிர்கள் தோற்றுவிக்கப் பட்ட பின்னர்ச் சொல், பொருள் பிரபஞ்சம் (கல்வி) தோற்றுவிக்கப்பெற்றது. பிரளய காலத்தில் உயிர்கள் அனைத்தும் அழியும்பொழுது அவ்வுயிர்களிடையேஇருந்த துன்னிய கல்வியும் அழியுமாறு செய்கிறான் இறைவன்.