பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் : 141 இவ்வாறு கூறியவுடன் அடியார் யார்? திருநீறும், அக்கமணியும் அணிந்தவர்கள் அனைவரும் அடியார்கள் தாமே அவர்கள் உள்ளத்தில் எல்லாம் இறைவன் குடியாய் உள்ளானோ என்ற ஐயம் எழுவது இயல்பே. இந்தச் சங்கடத்தைப் போக்குவதற்கு அன்பு மீதுார என்ற இரண்டு சொற்களைப் பெய்கின்றார் அடிகளார். மீதுர என்ற வினையெச்சம் செய்யுள் நோக்கி வந்ததாதலின் அதனைப் பெயரெச்சமாக மாற்றுவதில் தவறில்லை. அன்பு மீதுாரும் அடியார் உள்ளத்தைக் குடியாக் கொண்டான் என்கிறார் அடிகளார். அன்பு மீதுTரும் அடியார் என்றால் என்ன பொருள்? இவருடைய இறை அன்பு விநாடிக்கு விநாடி வளரும் இயல்புடையது என்பதே பொருளாகும். இதனையே சேக்கிழார், கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி (பெ.பு. : திருக்கூட்டச்சிறப்பு -8) என்று பேசுகின்றார். - இனி, மீதுர என்ற வினையெச்சத்தைப் பெயரெச்சம் ஆக மாற்றாமல் அப்படியே வைத்துக்கொண்டாலும் தவறில்லை. அன்பு மீதுாரக் குடியாக் கொண்டான்' என்று வரும் தொடருக்குக் குடியாக் கொண்ட காரணத்தால் மீதுர்தலாகிய காரியம் நிகழ்ந்தது என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது, அன்பு மீதுர்வான் வேண்டிக் குடியாக் கொண்டான் என்று பொருள் கொள்ளவும் இத் தொடர் இடந்தருகிறது. திருநீலகண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான், இளமை மீதுர இன்பத் துறையினில் எளியரானார்(பெ.பு : திருநீல கண்டர்-3 என்று பாடியுள்ளதைச் சிந்திக்க வேண்டும். இங்குள்ள மீதுார என்ற வினையெச்சம் மீதுர்தலினால் என்ற பொருளைத் தந்து நிற்கின்றது. இளமை மீதுர்ந்ததினால் எளியரானார் என்று அத்தொடர் முடிவடைகின்றது. இதே பொருளில் அடிகளாரின் தொடரையும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது அடியார்