பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருவாசகம் - சில சிந்தனைகள் அன்பு மீதுர்தலினால் அவர் உள்ளத்தைக் குடியாக் கொண்டான் என்று பொருள் கொள்வதும் ஒருவகை. மன்னு மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் கல்லாடத்துக் கலந்து இனிது அருளி நல்லாளோடு நயப்பு உறவு எய்தியும் (9–12) மகேந்திர மலையில் ஆகமங்களை அருளிச் செய்தும், கல்லாடம் என்ற தலத்தில் உமாதேவியோடு இனிதாக அமர்ந்தும் இருந்தனன் என்க. பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும் எஞ்சாது ஈண்டும் இன்னருள் விளைத்தும் கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை நல்தடம் படிந்தும் கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும் மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும், மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து உற்ற ஜம்முகங்களால் பணித்தருளியும் நந்தம் பாடியில் நான்மறை யோனாய் அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும் (13–22) இங்குக் கூறப்பெற்ற அடிகளில் காணப்படும் கதைகள் அடிகளார் காலத்தில் பெருவழக்காய் இருந்தனபோலும். இன்று இக்கதைகள் நன்கு அறியப்படாமையின் பலர் பல விதமாகப் பொருள் கூறுவர். இப்பகுதியில் நம் சிந்தனையைத் தூண்டக் கூடிய செய்தி காணப் பெறாமையால் மேலே செல்லலாம். - வேறு வேறு உருவும் வேறு வேறு இயற்கையும் நூறு நூறாயிரம் இயல்பினதாகி - ஏறுடைஈசன் இப்புவனியை உய்யக் கூறுடை மங்கையும் தானும் வந்தருளிக் (23–26)