பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 143 இறைவன் ஒருவனே எனினும், தான் படைத்த உலகின் தேவைக்கேற்ப வெவ்வேறு உரு எடுத்து, இம் மக்களிடைத் தோன்றிப் பல அற்புதச் செயல்களைச் செய்கிறான் என்பதைச் சொல்லவந்த அடிகளார். 'கூறுடை மங்கையும் தானும் வந்தருளி' என்று சொல்வதன் நோக்கம் யாது? பாட்டின் போக்கில் இத்தொடர் தேவையுமில்லை; அப்படியிருக்கக் கூறுடை மங்கையும் தானும் வந்து என்று கூறினாரென்றால் அதில் ஏதோ ஒரு கருத்து இருத்தல் வேண்டும். அடிகளார் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவருடைய காலத்தில் புத்த, சமண சமயங்கள் செல்வாக்கின்றி ஒரளவு தளர்ந்துவிட்டன. 8ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஆதிசங்கரர் தோற்றுவித்த அத்வைத சமயம் சூறாவளியாக இந்தியா முழுவதும் பரவலாயிற்று. புத்த, சமணர்கள் கடவுட் பொருளையே ஏற்காதவர்கள், அத்துடன் cois] or சமயத்தவர் பெண்களுக்கு வீடுபேறே இல்லை என்று சொல்லுமளவிற்குப் பெண்களைத் தாழ்த்திக் கூறினர். ஆதிசங்கரர் தம்முடைய கொள்கையில் பிரமத்தின் இலக்கணங்களைக் கூறும்போது, அப்பிரமம்தவிர ஏனைய அனைத்தும் 'மித்தை (பொய்) என்று கூறிவிட்டார். எனவே, தமிழ் மரபில் அன்னைக்குக் கொடுக்கப்பெற்ற இடம் மேலே கூறப்பெற்ற மூவராலும் ஏற்கப்படவில்லை. இவற்றை எல்லாம் மனத்திற்கொண்ட அடிகளார், தமிழ் நாட்டில் வழங்கிய இப்பழைய கதைகளை வரிசைப் படுத்தும்பொழுது எல்லா நிலையிலும் உமாதேவி உடனிருந்தாள் என்று கூறினாராயிற்று. - குதிரையைக் கொண்டு குடநாடுஅதன் மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தான் எழுந்தருளியும் வேலம்புத்துர் விட்டேறு அருளிக் கோலம் பொலிவு காட்டிய கொள்கையும்