பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 திருவாசகம் - சில சிந்தனைகள் தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்துர் வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும் மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி சொக்கு அதாகக் காட்டிய தொன்மையும் (27–34) விற்கப்படவேண்டிய போர்க்குதிரைகளை திருப் பெருந்துறையில் தொடங்கி மதுரைவரை கொண்டு சென்றமை, வேலம்புத்துார் என்ற இடத்தில் அடியவன் ஒருவனுக்கு வேற்படை தந்தமை: சாந்தம்புத்துாரில் கண்ணாடியிலிருந்து விற்படையை வரவழைத்துக் கொடுத்தமை, குதிரைச் சேவகனாக வந்தவனும் சொக்கப் பெருமானே என்பதை பாண்டியனுக்குக் காட்டியமை ஆகிய பழங்கதைகள் இங்குப் பேசப்பெற்றன. அரியொடு பிரமற்கு அளவுஅறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண்டு அருள அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறாஅது ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் துண்டு சோதி தோற்றிய தொன்மையும் (35-41) நான்முகன் (கல்வி, திருமால் (செல்வம்) ஆகியவருக்கு எட்டாதவனாகிய சொக்கன், நரிகளைக் குதிரைகளாக ஆக்கியமை, குதிரைகளைப் பாண்டியனிடம் கொடுத்து விட்டு அதற்குரிய பொருளை ஏற்கனவே திருவாதவூரர் மூலம் தாம் பெற்றுக்கொண்டதாகச் சொல்லிப் பாண்டியனுக்கு திருவடி தரிசனம் காட்டியமை ஆகிய கதைகள் இங்கே பேசப்பெற்றுள்ளன. அந்தணன் ஆகி ஆண்டுகொண்டு அருளி இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்