பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 145 ஆங்கது தன்னில் அடியவட் காகப் பாங்காய் மண்சுமந்து அருளிய பரிசும் (42–47) அந்தணவேடம் கொண்டு இந்திரஜாலம் செய்தமை; திருக்கோயிலில் சொக்கனாக உள்ளவனே திருவாதவூரர் பொருட்டுக் குதிரைச்சேவகன் ஆகியமை, வையை வெள்ளத்தைத் தணிக்க, வந்திக்குக் கூலியாளாய் வந்தமை ஆகிய கதைகள் இங்குப் பேசப்பெற்றுள்ளன. உத்தரகோசமங்கையுள் இருந்து வித்தக வேடம் காட்டிய இயல்பும் பூவண மதனில் பொலிந்திருந்து அருளித் துவன மேனி காட்டிய தொன்மையும் வாதவூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்புஒலி காட்டிய பண்பும் திருவார் பெருந்துறைச் செல்வன் ஆகிக் கருவார் சோதியில் கரந்த கள்ளமும் பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப் பாவம் நாசம் ஆக்கிய பரிசும் (48–57) திரு உத்தரகோச மங்கையில் அடிகளார் விரும்பிய ஞானாசிரியக் கோலத்தைக் காட்டுவித்தமை, திருப் பூவணத்தில் பொன்மேனி காட்டியமை; திருவாதவூரில் திருப்பாதச் சிலம்பின் ஒலியைக் கேட்பித்தமை; திருப் பெருந்துறையில் தம்மை ஆட்கொண்ட ஞானாசிரியர் தம்மை விட்டுவிட்டு ஏனைய அடியார்களுடன் ஒளிப்பிழம்பில் மறைந்தமை; தலங்கள்தோறும் சென்று தரிசித்துத் தம் பாவத்தைப் போக்கிக் கொண்டமை ஆகிய கதைகளும் நிகழ்ச்சிகளும் இங்கே பேசப்பெற்றன. தண்ணிப் பந்தர் சயம்பெற வைத்து நன்னீர்ச் சேவகன் ஆகிய நன்மையும் விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும்