பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருவாசகம் - சில சிந்தனைகள் . பட்டமங்கையில் பாங்காய் இருந்துஅங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் வேடுவன் ஆகி வேண்டும் உருக்கொண்டு காடது தன்னில் கரந்த கள்ளமும் மெய்க் காட்டிட்டு வேண்டும் உருக்கொண்டு தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும் ஒரியூரில் உகந்தினிது அருளிப் பார்இரும் பாலகன் ஆகிய பரிசும் பாண்டுர் தன்னில் ஈண்ட இருந்தும் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் கோவார் கோலம் கொண்ட கொள்கையும் (58-72) தண்ணிர்ப் பந்தர் வைத்தமை; திருவெண்காட்டில் குருந்த மரத்தடியில் இருந்தமை பட்டமங்கை என்ற ஊரில் அட்டமாசித்தி காட்டியமை ஆகியவற்றுடன் 6467ஆம் அடிவரை காணப்பெறும் திருவிளையாடல் புராணக் கதைகளும் இங்குப் பேசப் பெறுகின்றன விருத்த, குமார, பாலன் ஆனமை; இலங்கையில் அரசனாக இருந்த அடியவன் ஒருவனுக்குக் காட்சி கொடுத்தமை ஆகிய் செய்திகளும் இங்குப் பேசப் பெற்றுள்ளன. - . - தேன்அமர் சோலைத் திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நின்மையும் இடைமருது அதனில் ஈண்ட இருந்து - படிமப் பாதம் வைத்த அப்பரிசும் (73–76) இவற்றின் பொருள் விளங்கவில்லை. ஏகம்பத்தில் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோடு ஆயின பரிசும் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் சேவகன்ஆகித் திண்சிலை ஏந்திப் - பாவகம் பலபல காட்டிய பரிசும் : (77–82)