பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 147 காஞ்சியில் மாமரத்தின் அடியில் சுயம்புவாய் நின்று அம்மையின் வழிபாட்டை ஏற்றுக்கொண்டமை; திருவாஞ் சியத்தில் அம்மையில் வழிபாட்டை ஏற்றுக் கொண்டமை; வில்வீரனாக நின்று யானை எய்தல் முதலியவை இங்குப் பேசப்பெற்ற கதைகளாகும். - கீர்த்தித் திருஅகவலில் ஏறத்தாழ எழுபது அடிகள் இறைவன்பற்றிய LHόλ) கதைகளைப் பாடியுள்ளன. இவற்றுள்சில, சில மாறுபாடுகளுடன் திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்றுள்ளன. கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் ஐயாறு அதனில் சைவன் ஆகியும் துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும் புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் குற்றாலத்துக் குறியாய் இருந்தும் (83–91) கடம்பூர், திருஈங்கோய்மலை, திருவையாறு, திருத்துருத்தி, திருப்பனையூர், கழுமலம் (சீர்காழி, திருக்கழுக்குன்று, திருப்புறம்பயம், குற்றாலம் ஆகிய சிவனுறையும் தலங்களை நினைவில் தோன்றியவாறு அடிகளார் வரிசைப்படுத்திக் கூறியதாகும் இப்பகுதி. அந்தம்இல் பெருமை அழல்உருக் கரந்து சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு இந்திர ஞாலம்போல வந்து அருளி - எவ்வெவர் தன்மையும் தன்வயின் படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம்மிறை (92–96) இவ்வடிகளில் பண்டொருகாலத்தில் தேவருலகில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றை அடிகளார் கூறுகின்றார்.