பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருவாசகம் - சில சிந்தனைகள் அகரர்களை வென்ற தேவர்கள், அவ் வெற்றிக்குக் காரணமானவர் யார் என்ற வினாவை எழுப்பிக்கொண்டு தம்முள் சண்டையிட்டு நின்றனர். இந்திரன் முதலிய அட்ட திக்குப் பாலர்களும், நான்முகன் உள்ளிட்ட தேவர்கள் பலரும் இக் கலகத்தில் தருக்கி நின்று போரிடத் தொடங்கினர். அந்நிலையில் ஒரு மூலையில் அழகே வடிவான யட்சன் ஒருவன் ஒரு துரும்பை எடுத்து நட்டுவிட்டு அதன் பக்கத்தில் எல்லையற்ற அலட்சிய பாவத்துடன் அமர்ந்து, தேவர்களைப் பார்த்துக் குறுநகை செய்துகொண்டிருந்தான். அது கண்ட தேவர்கள் அந்த யட்சனை யார் என்று வினவினர். யட்சன் அவர்கள் வினாவிற்கு விடை கூறாமல் உங்களில் யார் இந்த துரும்பை அசைக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்’ என்றான். வருணன், அக்கினி முதலிய தேவர்கள் என்ன முயன்றும் துரும்பை அசைக்க முடியாமல் வெட்கி நின்றனர். யட்சன் மறைந்துவிட்டான். அவ்விடத்து உமையம்மை தோன்றி, துரும்பைக்கூட அசைக்க முடியாத தேவர்களே ! நீங்களா அசுரர்களை வென்றீர்கள்? அசுரர்களை நீங்கள் வென்றீர்களோ இல்லையோ, உங்கள் ஆணவம் உங்களை வென்று விட்டது. அசுரரை நீங்கள் வென்றமைக்குக் காரணம், சிவபெருமானே அன்றி நீங்களில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், இங்கு 'யட்சனாக வந்தவனும் சிவபெருமான்தான்’ என்று கூறி மறைந்தாள். சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி • 参 அந்தரத்து இழிந்து வந்து அழகுஆர் பாலையுள் சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் (97–99) சந்திரதீபம் என்னும் தலத்தில் சாத்திரங்களை அருளும் ஆசானாகி நின்றான் என்க. இலைகள் இல்லாது பட்டுப்போய் நின்ற பாலை மரத்தின்மேல் ஆகர்யத்தில்