பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 149 இருந்து இறங்கிவந்து அமர்ந்தமையின் அம்மரமும் அழகுடையது ஆயிற்று என்க. மந்திர மாமலை மகேந்திர வெற்பன் அந்தம்இல் பெருமை அருள்உடை அண்ணல் எம்தமை ஆண்ட பரிசது பகரின் (100–102) எல்லையற்ற பெருமையுடையவனும், மகேந்திர மலைக்கு உரிமையுடையவனும், எம்மை ஆண்டு கொண்டவனும் ஆகிய அண்ணலின் பெருமை பின் வருமாறு என்று தொடங்கி அவனுடைய தசாங்கம் கூறுகின்றார். ஆற்றல் அதுஉடை அழகுஅமர் திருஉரு நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும் ஊனம் தன்னை ஒருங்குஉடன் அறுக்கும் ஆனந் தம்மே ஆறா அருளியும் (103-106) அழகே வடிவான தன்மேனி முழுவதும் நீறு பூசிய கோலங் காட்டியும் என்க. பிறவியில் தோன்றும் ஊனத்தை ஒருங்கே அறுக்கும் பேரானந்தமே தமக்குரிய ஆறாகவும் (வழியாகவும்) கொண்டான் என்க. மாதில் கூறுடை மாப்பெரும் கருணையன் நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும் - அழுக்குஅடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன் கழுக்கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் (107–110) இறைவியை ஒரு கூறாக உடைய பெருமான் ஆதிநாதமாகிய ஒலியில் அனைத்தையும் தோற்றுவிக்கிறான் ஆதலின் அதனை நாதப் பெரும்பறை என்றார் என்க. (இறைவியைக் கூறாக உடையன் என்றமையின் பெண்ணின் பெருமையை அன்றே கூறினார் என்க.) உயிர்கட்குப் பிறவித்துன்பம் வாராமல் காக்ககூடிய