பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருவாசகம் - சில சிந்தனைகள் பெருமான் கழுக்கடை எனப்படும் திரிசூலத்தைக் கையிற் கொண்டுள்ளான் என்க. மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும் மேனிச் சுடர்விடு சோதி காதலன் ஆகிக் கழுநீர் மாலை 参 海 ஏல்உடைத்து ஆக எழில்பெற அணிந்தும் (11-114) பிறவிக்கு வித்தாக உள்ள மும்மலங்களையும் அறுக்கின்றவனும் ஒளி பொருந்திய வடிவினை உடையவனும் ஆகிய பெருமான் விருப்பத்தோடு அணிந்திருப்பது செங்கழுநீர்ப் பூக்களால் ஆகிய மாலை 叙f@演「空g。 அரியொடு பிரமற்கு அளவுஅறியாதவன் - - பரிமாவின்மிசைப் பயின்ற வண்ணமும் (115-116) இவனுடைய எல்லை காண முற்பட்டு அடிமுடி அறியமுடியாமல் நான்முகனும், திருமாலும் திகைத்த நின்றனர் என்க. அந்த அழகிய வடிவினன் தன்வடிவைக் குறுக்கிக்கொண்டு குதிரைச் சேவகனாக வந்தவண்ணம் சிறப்புடையது என்க. மீண்டு வாராவழி அருள் புரிபவன் பாண்டி நாடே பழம்பதி ஆகவும் பத்திசெய் அடியரைப் பரம்பரத்து உய்ப்பவன் உத்தரகோச மங்கை ஊர்ஆகவும் ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய தேவதேவன் திருப்பெயர் ஆகவும் இருள்கடிந்து அருளிய இன்ப ஊர்தி அருளிய பெருமை அருள்மலை ஆகவும் (117–124) தன்னிடம் பக்தி பூண்ட அடியவர்களை வீடுபேற்றில் உய்ப்பவனும்; தன் திருவருளைப் பெற்றவர்கள் மீண்டும் பிறப்பெடுக்காமல் செய்பவனும் ஆகிய பெருமான் பாண்டி நாட்டைப் பழம்பதியாகக் கொண்டவன் என்க.