பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 151 அன்றியும் திருஉத்தரகோசமங்கையைத் தனது ஊராகவும் கொண்டவன் என்க. முதல் தேவர்கள் என்று கூறப்படும் மும்மூர்த்திகட்கும் அருள்புரிந்தவன் ஆகிய இப்பெருமான் மகாதேவன் என்ற பெயரை உடையவன் என்க. உயிர்களின் அஞ்ஞானம் ஆகிய இருளைக் கடியும் அவனுடைய கருணையையே ஆறாகவும், கைம்மாறு கருதாமல் உயிர்கட்குச் செய்கின்ற அருளையே மலையாகவும் கொண்டனன் என்க. இவ்வாறு கூறியதில் கொடி தொடக்கம் மலை ஈறாகச் சொல்லப்பெற்ற பத்தும் அவனது தசாங்கம் என்க. எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டு அருளி (125-26) இந்த இரண்டு அடிகட்கும் மரபுவழிப் பொருள் கூறுபவர் வெவ்வேறு விதமாகக் கூறுவர். ஆழ்ந்து சிந்தித்தால் படைப்பின் இரகசியத்தையும், மாறுபட்ட பல் வேறு வழிகளில் செல்பவர் ஓரிடத்தில் சேரும் இயல் பையும் அடிகளார். இங்குக் குறிப்பிடுகின்றார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இறைவனுடைய படைப்புகளில் பல்வேறு மன அறிவு வளர்ச்சி உடையவர்கள் ஒரே சமுதாயத்தில், ஒரே இடத்தில், ஒரே காலத்தில் கூடி வாழக் காண்கிறோம். ஒன்றாகவே வாழ்ந்தாலும் இவர்கள் ஒவ்வொருவருடைய தன்மையும், திறமும் வெவ்வேறு ஆனவை. இவர்கள் அனைவரும் ஒரே கொள்கையைப் பின்பற்றி ஒரே வழியில் செல்லவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகக் கடினமான காரியமாகும். அனைவரும் ஒரே வழியில், ஒரே முறையில், ஒரே நம்பிக்கையுடன் வாழ்ந்து முன்னேற வேண்டுமென்றால், இவர்கள் அனைவரையும் ஒரே வகையான அளவுடைய மனம், அறிவு என்பவற்றுடன் இறைவன் படைத்திருக்க வேண்டும். செம்மறி ஆடுகளைப்போன்ற இந்த ஒரே