பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 153 இதற்கு மறுதலையைாகத் திருநாளைப்போவார் தம் பிறப்பு இழிவானதென்றும் இந்த உடம்புடன் திருக் கோயிலுக்குள் செல்லக்கூடாதென்றும் தாமே முடிவு செய்து கொண்டார். திருப்புன்கூர்நாதன் நந்தியை விலகுமாறு செய்தும்கூட நந்தனாரின் உள்ளத்தில் தம் பிறப்பைப்பற்றிய தாழ்வுணர்ச்சி நீங்கினபாடில்லை. சிதம்பரம் சென்றுங்கூடக் கோயிலுக்குள் செல்ல முடியாமல் இன்னல்தரும் இழிபிறவி இது தடையாம்' (பெ.பு:திருநாளைபோவார்-27) என்ற எண்ணத்துடனேயே துயில்கின்றார். இந்த நிலையில் தில்லைக்கூத்தன் 'பிறப்பில் இழிவு எதுவும் இல்லை, நீ உள்ளே வரலாம்’ என்று ஆணையிட்டிருக்கலாம். ஆனால், அவன் அவ்வாறு செய்யவில்லை. அதன் எதிராக நந்தனார் கனவிடைத் தோன்றி இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய்” (பெ.பு. திருநாளையோவார்-28) என்றுதான் கூறுகிறார். ஆக தம் செயல்பற்றிய ஐயங்கொள்ளாத திண்ணனாரை அப்படியே ஏற்றுக்கொண்ட இறைவன், மனத்தில் பெரிதும் . ஐயம் கொண்டு பிறப்புத்தடை என்று நினைக்கும் நந்தன்ாரை அவர் விருப்பப்படியே இப்பிறப்புப் போகுமாறு செய்கிறார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ஆழ்ந்து சிந்தித்தால் அடிகளாரின் இரண்டு அடிகட்கு உண்மையான பொருள் விளங்கும். நாயினேனை நலம்மலி தில்லையுள் கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன ஏல என்னை ஈங்குஒழித் தருளி அன்றுஉடன் சென்ற அருள்பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன்கலந்து அருளியும் (127-131) 11