பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருவாசகம் - சில சிந்தனைகள் மேலே காட்டிய ஐந்து அடிகளில் திருப்பெருந் துறையில் நிகழ்ந்ததை அடிகளார் நினைவு கூர்கின்றார். அமைச்சராக வந்த தம்மை முற்றிலுமாக மாற்றி இறையனுபவத்தைத் தந்த குருநாதர், தில்லையில் வருக என்று பணித்து மறைந்தார். இந்த உத்தரவு கிடைத்த பின்பு குருநாதரும் சீடர்களும் மறைந்துவிட்டனர். அம் மறைவினால் திடுக்குற்ற அடிகளார் தாம் ஏன் விடப் பட்டோம் என்று வருந்துகின்ற நிலையில் கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என்ற குருவினது ஆணை மனத்திற்கு அமைதி தருகின்றது. ஏதோ ஒரு காரணத்திற் காகத்தான் தம்மை இவ்வுலகிடை விட்டு விட்டுக் குருநாதரும் சீடர்களும் சென்றுவிட்டனர் என்ற தெளிவு பிறக்கின்றது அடிகளாருக்கு. மந்திரியாகத் திருப்பெருந் துறையில் நுழைந்த தமக்கு ஒருசில மணித்துளிகளில் இத்தனை அனுபவம் கிடைத்ததை நினைக்கின்றார் அடிகளார். பல பிறப்புக்கள் எடுத்துப் பல முயற்சிகள் செய்து பெறவேண்டிய இவ்வனுபவம் திடீரென்று தமக்குக் கிடைத்தவுடன், அதற்கு எவ்விதத் தகுதியும் தம்பாலில்லை என்பதை நினைக்கிறார். எனவே, நாயினேனை' என்று கூறிக்கொள்ளத் தொடங்குகிறார். நாய் என்று தம்மைக் கூறிக்கொள்ள இங்கே தொடங்கிய அடிகளார் திருவாசகம் முழுவதிலும் இக்கருத்தைப் பற்பல இடங்களில் கூறிச் செல்கிறார். 'ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளினான்’ என்ற அடியில் வரும் ஏல என்ற சொல்லிற்குப் பிற உரையாசிரியர்கள் கூறுவதுபோல 'வினைக்கு ஏற்ப என்று பொருள்கொள்வது பொருத்தமாகப் படவில்லை. ஏல’ என்ற சொல்லுக்குப் பொருந்துமாறு’ என்று பொருள் கொள்வதே சரியானது எனத் தோன்றுகிறது. பொருந்து மாறு என்றால் எதனோடு பொருந்துமாறு என்ற