பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 155 வினாவிற்கு, இறைவனுடைய எண்ணத்திற்குப் பொருந்துமாறு என்று பொருள்கொள்வதே விடையாகும். அப்படியானால் அவனுடைய எண்ணம் என்ன? அடிகளார் மூலம் திருவாசகப் பாடல்கள் வெளிவர வேண்டும் என்பதே அவனுடைய திருவுளமாகும். இறைவன் திருவுள்ளம் அதுவாதலால் அதற்குப் பொருந்த அடிகளாரை 'உடனழைத்துச் செல்லாமல்’ இங்கே விட்டுவிட்டான் என்பதை உணர்கின்றார். அதைக் கூற வேண்டும். ஒழித்து என்ற சொல்லின்படி வேண்டா என்று விட்டுச் சென்றான் என்ற பொருள் வந்துவிடும். ஆனால், இறைவன் தம்மை இங்கு விட்டது அவனது திருவுளப்பாங்கின் வண்ணமாகும். அதைக் குறிக்க ஏல’ (பொருந்துமாறு என்ற சொல்லையும் பயன்படுத்தினார். ஆனால், தம்மைப் பொறுத்தவரையில் அனுபவம் தம்மை விட்டுக் கழன்று போனதும், அடியார்கள் தம்மை விட்டுப் பிரிந்துபோனதும் பெரு நட்டம் என்று அடிகளார் கருதுகின்றார். ஆகவேதான், ஒழித்து என்ற சொல்லைப் பயன்படுத்தினார். அவ்வாறு ஒழித்தமைக்கு நல்ல காரணத்தைப் பின்னர் உணர்ந்தார் ஆதலின், ஒழித்து என்ற சொல்லோடு அருளி என்ற சொல்லையும் பயன்படுத்தினார். . குருநாத்ரும் அடியார்களும் திடீரென்று தம்மைவிட்டு மறைந்தமையின் தம்மிடமுள்ள ஏதோ ஒரு குறைகாரண. மாகத்தான் விட்டுப் போயினர் என்ற எண்ணத்தில் அடிகளார் பெருந்துயரெய்தினார். ஆனால், அந்த எண்ணம் சிறிது சிறிதாக அவரைவிட்டு நீங்கலாயிற்று. புறத்தே காட்சி தந்த குருநாதர் இப்போது அவரது அகத்தே புகுந்துவிட்டார். ஆதலால், இதுவரை அவர் சிந்திக்காத புதிய சிந்தனைகள் அவர் உள்ளத்தில் தோன்ற லாயின. தாம்பெற்ற இறையனுபவத்தைப் பாடவேண்டும் என்று அவர் இதுவரை கருதியதில்லை. இப்பொழுது தாம்