பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 திருவாசகம் - சில சிந்தனைகள் இங்கே விடப்பட்டமைக்குக் காரணம் அவ்வனுபவத்தைப் பாடல்களாகப் பாடவேண்டும் என்பதுதான் என்ற எண்ணம் தோன்றலாயிற்று. தாம் விடப்பட்ட செயலே அவருடைய எண்ணத்தில் புதிய சிந்தனையைத் தூண்டிற்று. இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரத்திலும் காணமுடிகிறது. வெட்டுண்ட கணவனை மறுபடியும் முழுவதுமாகக் கண்டு, அவன் வாயாற் பேசுவதைக் கேட்கமுடியும் என்ற உறுதிப்பாட்டோடு கண்ணகி, கோவலன் வெட்டுண்ட இடத்திற்குச் செல்கிறாள். அவள் நினைத்தபடியே இறந்த கணவன் எழுந்தான்; அவள் கண்ணிரைக் கையால் மாற்றினான். எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க.'(சிலம்பு : ஊர்சூழ்-67 என்று சொல்லிவிட்டு வீழ்ந்துவிட்டான். பாண்டியனைப் பற்றியோ, அவன் செய்த தவறுபற்றியோ, கணவன்மேல் பழி சுமத்தப்பெற்றதுபற்றியோ இதுவரையில் கண்ணகி சிந்திக்கவில்லை. கற்புடைய தன்னை உடனழைத்துச் செல்லாமல் இங்கே இருப்பாயாக இருந்தைக்க) என்று ஏன் கூறினான்? இந்த எண்ணம் கண்ணகிக்குத் தோன்றியவுடன்தான் பாண்டியனிடம் வழக்குரைக்க வேண்டும் என்ற புதிய சிந்தனை பிறந்தது. பல சமயங்களில் மிகப் பெரிய காரியங்கள் ஒரு சிறு சொல்லாலோ அல்லது செயலாலோ நிகழக்கூடும் என்பதற்கு இவை இரண்டும் உதாரணங்கள் ஆகும். அடிகளாரை உடனழைத்துச் செல்லாமல் கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என்று ஆணையிட்டு மறைந்தது, திருவாசகம் தோன்றக் காரணமாயிற்று. கண்ணகியை உடனழைத்துச் செல்லாமல் இருந்தைக்க என்று கோவலன் சொல்லிச்சென்றது கண்ணகி வழக்குரைக்கக் காரணமாயிற்று.