பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 157 'ஏல என்ற சொல்லுக்கு என் வினைக்கேற்ப என்னை இங்கே விட்டுச் சென்றான்’ என்று அறிஞர் பலரும் பொருள் கூறியுள்ளனர். திருப்பெருந்துறையில் புவனியிற் சேவடி தீண்டி இருந்தவன் சிவனென அறிந்தேன்’ என்று அடிகளாரே கூறுகின்றார். அந்தக் குருநாதர் இவரைத் தொட்டுத் திருவருள் செய்தபின்பு இறையனுபவத்தில் மூழ்குகிறார் அடிகளார். அந்த அனுபவத்திலிருந்து வெளி வரும்போது குருநாதர் முதலியோர் அங்கில்லை என அறிகிறார். மானிட உடலோடு கூடிய அடிகளாரை இறைவனே தொட்டுத் தீட்சை செய்த பின்னரும் அவருடைய வினைகள் அவரை விட்டுப் போகவில்லை என்றோ, அந்த வினைகளுக்கு ஏற்பவே அவர் இங்குத் தங்குமாறு ஆகிவிட்டது என்றோ பொருள் கூறுவது சற்றும் பொருத்தமாகப் படவில்லை. எனவேதான், 'ஏல’ என்ற சொல்லுக்கு வேறு பொருள் கூறியுள்ளோம். குருநாதரின் உட்னிருந்த அடியவர் கூட்டம் அவர் சென்ற முறையில் தாங்களும் உடன் சென்றுவிட்டனர். அங்ங்னம் செல்லுமாறு இறைவனே அருளினான் என்பதை 'அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்’ என்ற இரு அடிகளின் மூலம் பெறவைக்கிறார். எய்த வந்திலாதார் எரியில் பாயவும் மாலது ஆகி மயக்கம் எய்தியும் பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும் கால்விசைத்து ஒடிக் கடல்புக மண்டி நாதநாத என்றுஅழுது அரற்றிப் பாதம் எய்தினர் பாதம் எய்தவும் பதஞ்சலிகு அருளிய பரமநாடக என்று - இதம்சலிப்பு எய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் (132-139)