பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 திருவாசகம் - சில சிந்தனைகள் திருப்பெருந்துறையில் அடிகளாருக்கு இப்பெருநிகழ்ச்சி நடைபெறுகின்றபொழுது தூரத்தே நின்று பலர் இப் புதுமையைக் கண்டிருத்தல் கூடும். அவருட் சிலர் இந்நிகழ்ச்சியின் தத்துவத்தை அறிந்திருத்தலும் கூடும். ஆனால், அச்சம் காரணமாக நெருங்கி வராமல் துரத்தில் நின்றிருக்கக் கூடும். திடீரென்று பெரும்சோதி தோன்றியதும், குருநாதரும் அடியவர்களும் அச்சோதியில் கலந்தனர் என்று அவர்கள் கருதினர். சோதியின் தோற்றத்தின்பின் ஓடிவந்து அதனுள் புக முயன்று தம் எண்ணம் கைகூடாமையால், நெருப்பினில் வீழ்ந்தனர் சிலர்; தரையிற் புரண்டு அழுதனர் சிலர்; மயக்கம் உற்றனர் சிலர், இம்முறையில் தம் உடம்பை நீத்துத் தில்லைக் கூத்தன் பாதம் எய்தினர். அங்ங்ணம் உயிரை விடத் துணியாதார் பதஞ்சலிக்கு நட்டம் ஆடிக் காட்டிய பெருமானே’ என்று கூறித் தம் எண்ணம் நிறைவேறாச் சலிப்பை வெளிக் காட்டிக் கொண்டனர் என்க. எழில்பெறும் இமயத்து இயல்புஉடை யம்பொன் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம்நவில் கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடியவரோடும் பொலிதரு புலியூர்ப் புக்குஇனிது அருளினன் ஒலிதரு கயிலை உயர் கிழவோனே. (140–146) கயிலை மலையிலுள்ள பெருமான் இப்பொழுது புலியூரிற் புகுந்தனன். புலியூரிற் புகுந்தவனைக் கூறவந்த அடிகளார் அவனுடைய புன்னகையை இரண்டு வகைப்படுத்திக் காட்டுகிறார். உமைக்கும், காளிக்கும் காட்டிய சிறுநகை உடையவன் பெருமான் என்கிறார். உமையையும், காளியையும் ஒருசேரக் கூறவேண்டியதன் காரணம் என்ன? ஆற்றல் (சக்தி, ஓர் அளவுக்கு உட்பட்டுத் தொழிற்படும்போது ஆக்கப் பணிகள்