பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 159 நடைபெறுகின்றன. அணுவினுள் இருக்கின்ற ஆற்றல் அளவுக்கு உட்பட்டுத் தொழிற்படும்போது புதிய பொருள்கள் தோன்றுகின்றன; பொருள்களில் சில இயல்பான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஆக்கச்சக்தி என்று கூறப்படும். இவ்வாறின்றி அணுவினுள் இருக்கும் ஆற்றல் எல்லைமீறித் தொழிற்பட்டால் அழிக்கும் தொழிலைச் செய்யும் அணுகுண்டாக மாறிவிடுகிறது. இதனை அறிந்த நம் முன்னோர் ஆக்கச்சக்திக்கு உமை என்றும், அழிவுச் சக்திக்குக் காளி என்றும் பெயரிட்டனர். இரண்டையும் கடந்து நிற்கின்ற பரம்பொருள் ஆக்கச்சக்தி தொழிற்படும்போது அதனைத் தன் புன்சிரிப்பால் ஆமோதிக்கின்றான், அழிவுச்சக்தி தொழிற் படும்போது அதே புன்முறுவலால் அதனை அடக்கி விடுகிறான். இதனையே அடிகளார் 142, 143 ஆம் அடிகளிற் குறிப்பிடுகின்றார். கயிலைக் கிழவோன் தில்லையுட்புக்கு இருந்தனன் என்ற தொடரில் அடிகளார், தில்லையின் வரலாற்றைக் குறிப்பாகப் பேசுகிறாரோ! என்று நினைக்கத்தோன்றுகிறது. ஐந்தாம் நூற்றாண்டுவரை தில்லை இருந்ததாகத் தெரியவில்லை. அதுவரையில் சிறப்புற்று விளங்கிய தலம் திருவாலங்காடு ஆகும். திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் புரிகின்ற பெருமான் குழந்தையாகஇருந்து தன்னை வழிபட்டுக்கொண்டிருந்த உபமன்யு முனிவனின் வேண்டுதலுக்கு இணங்கித் தில்லை சென்று ஆனந்தத் தாண்டவம் புரிந்து உயிர்களுக்கு அருள் செய்கிறான் என்ற செய்கி திருவாலங்காட்டுத் தலபுராணத்தில் காணப்படுவதாகும். இங்கு அடிகளார் புலியூர்ப் புக்குப் பதஞ்சலிக் கருளிய பரம நாடக என்று கூறுவதால் இந்த வரலாற்றை நினைவுகூர்ந்து பேசுகிறாரோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.