பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருவாசகம் - சில சிந்தனைகள் இந்திய அரசின் உதவிபெற்று நடராஜரைப் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்து நடராஜா என்ற பெயரில் மிகப் பெரிய ஆங்கில நூலை வெளியிட்டுள்ளார் டாக்டர் சிவராமமூர்த்தி. அந்நூலின்படி பார்த்தால் தில்லைபற்றி மிகப் பழமையான வடமொழிக் குறிப்புகள் எட்டாம் நூற்றாண்டு முதலே உள்ளன. ஆனால், நாவரசர் பெருமான் தில்லையைப்பற்றிப் பாடியுள்ளார். ஆதலால் வடமொழி அல்லாமல் தமிழ்மொழியில் மிகப் பழமையான தில்லைபற்றிய குறிப்பு நாவரசர் பெருமானின் தேவாரமேயாகும். சிவபுராணத்தின் முதல் பதினைந்து அடிகளில் திருவடிப் பெருமையைப் பேசிய அடிகளார் கீர்த்தித் திருஅகவலின் தொடக்கத்திலும் அதே திருவடிகளுடன் தொடங்குகிறார். சிவபுராணத்தில் திருவடிக்கும் அடிகளாருக்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில் அந்தப் பதினைந்து அடிகளும் தோன்றலாயின. கீர்த்தித் திருஅகவலின் தொடக்கத்தில் அடிகளார், தம்மை விட்டுவிட்டுத் திருவடிகளைப்பற்றி மட்டும் சிந்திக்கிறார். தம்மைப் பொறுத்தவரை மிக எளிதாகக் காட்சி தந்த அத்திருவடிகள் எத்துணைப் பெருமையும் சிறப்பும் உடையவை. என்று நினைந்து வியக்கும்பொழுது அத். திருவடிகள் எங்கும் நிறைந்துள்ளமையை (சர்வ வியாபகம்) அவரால் அறிய முடிகின்றது. ஊனக் கண்ணாற்கடக் கண்டு மகிழும்படி தில்லை மூதூரில் ஆடிய திருவடிகள் இப்பிரபஞ்சத்தில் அன்றும், இன்றும், என்றும் உள்ள உயிர்கள்தோறும், அவ்வுயிர்களுக்கு உயிராய் உள்ளே மறைந்து நிற்பவையாம். இந்த எண்ணம் தோன்றியவுடன் கீர்த்தித் திருஅகவலின் முதலிரண்டு அடிகள் வெளிப்படு கின்றன.