பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீர்த்தித் திருஅகவல் - சிந்தனைகள் 161 அப்பெருமானின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாபெரும் காரியம் திருப்பெருந்துறையில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். தம் சுய சரிதத்தில் திருப்பெருந்துறை நிகழ்ச்சி தம் வாழ்க்கையையே மடைமாற்றம் செய்துவிட்டது என்பதை உணர்ந்த அடிகளார் அந்நிகழ்ச்சியை ஆற அமர இருந்து யோசிக்கின்றார். ஒரே விநாடியில் தம் வாழ்க்கையை மடைமாற்றம் செய்த பெருமானைப்பற்றி நினைக்கும் பொழுது இந்நிகழ்ச்சிக்குமுன்னர் அவன் செய்த பல்வேறு திருவிளையாடல்கள் நினைவுக்கு வருகின்றன. அவ் விளையாடல்கள் பலவற்றிலும் பெருமான் தனித்து நிற்காமல் உமையோடு சேர்ந்தே விளையாடல்களை நிகழ்த்தினான் என்பதைத் திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்’ (79, 80) போன்ற அடிகளில் குறிப்பிடுகின்றார். நூற்று ஒன்றாம் அடிவரை இறைவன் பெருமை. பேசிய அடிகளார். அவன் தமக்கு அருள் செய்ததை எந்தமை ஆண்ட பரிசது பகரின் என்று தொடங்குகிறார். தசர்ங்கம் என்ற பெயரில் அவனுடைய சிறப்புக்களைப் பேசிவிட்டு "தில்லைக்கு வருக என்று குருநாதர் பணித்ததைப் பேசுகின்றார். அடுத்து, அவருடைய வாழ்க்கையில் திருப்பெருந்துறையில் நிகழ்ந்த மிக முக்கியமானதொரு நிகழ்ச்சியை 132-187ஆம் வரிகளில் குறிப்பிடுகின்றார். கோலமார்தரு பொதுவினில் வருக’ எனப் பணிக்கப் பட்டமையின் தில்லைக் காட்சி நினைவுக்கு வருகின்றது. - ஆக, கீர்த்தித் திருஅகவலில் பெரும்பகுதி சுயசரிதக் குறிப்புக்களோடு அமைந்திருத்தலை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சோபான முறையில் அல்லாமல் கண்ணப்பரைப்போல அடிகளாரும் ஒரே நாளில்