பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆற்றே னாக அவயவஞ் சுவைதரு க்ோல்தேன் கொண்டு செய்தனன் ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின் விழ்வித் தாங்குஅன்று * * * * அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் 160 ஒருத்தரும் வழாமை யொடுக்கினன் - தடக்கையின் நெல்லிக் கணியெனக் காயினன் சொல்லுவ தறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான்னனைச் செய்தது தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு 165 அருளிய தறியேன் பருகியு மாரேன் விழுங்கியும் ஒல்ல கில்லேன் செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து உவாக்கடல் நள்ளுநீ ருள்ளகந் ததும்ப வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் 170 தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் ஏற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175 உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்கு அள்ளு றாக்கை யமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன், என்னில் கருணை வான்தேன் கலக்க 180 அருளொடு பராவமுது ஆக்கினன் பிரமன்மா லறியாப் பெற்றி யோனே. 182 திருச்சிற்றம்பலம்