பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. திரு அண்டப்பகுதி சிந்தனைகள் திருவாசகத்திலுள்ள நான்கு அகவல்களில் மூன்றாவ தாக உள்ளது இப்பகுதியாகும். திருஅண்டப் பகுதி என்ற பெயரை ஆசிரியரே தந்தாரா? அன்றி பிற்காலத்தவர்கள் தந்தார்களா? என்ற ஆய்வு பயன்படும் என்று தெரிய வில்லை. ஒரு பாடலின் முதலடியை அல்லது அவ்வடியின் ஒரு பகுதியை அத்தொகுப்பு முழுவதற்கும் பெயராக வைக்கும் பழக்கம் பண்டுதொட்டே இருந்து வந்தது. அந்த முறைபற்றி பின்னே வந்தவர்கள் இப்பெயரை இட்டிருத்தல் கூடும். இத்தலைப்பின் கீழ் எழுதப் பெற்றுள்ள மற்றொரு குறிப்பு ‘சிவனது துல சூக்குமத்தை வியந்தது’ என்பதாகும். இக்குறிப்பை எழுதியவர் இப் பகுதியில் மிகவும் தோய்ந்துள்ளார் என்று நினைக்கத் தோன்றுகிறது. - திருவண்டப் பகுதியின் முதல் ஆறு அடிகளை ஆழ்ந்து பலமுறை சிந்தித்தால் முதலில் அது வியப்பைத் தருவது உண்மைதான். 19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் விரிவடைந்த வானியல் அறிவு எந்த அளவிற்கு இந்த ஆறு அடிகளில் பயிலப்பட்டுள்ளது என்பதைக் காணும் பொழுது வியப்பு மேலிடுகிறது. வானியலார் யூனிவர்ஸ் (Universe) என்று கூறுவதைத் தமிழர் அண்டம் என்ற சொல்லால் குறிப்பிட்டனர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோப்பர்நிக்கஸ், கலிலியோ என்பவர்கள் முதன்முதலாக இந்தப் பூமி உருண்டையானது என்றும், சூரிய மண்டலத்தை இது சுற்றிவருகிறது என்றும் கூறினர். அன்றைய, அந்நாட்டுச் 12