பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருவாசகம் - சில சிந்தனைகள் சமய உலகம் இதனை ஏற்றுக்கொள்ளாமல் அவர்களுக்குத் தண்டனை வழங்கியது. பால்வெளியிலுள்ள சூரிய மண்டலத்தைப்போல பல ஆயிரக்கணக்கான மண்டலங்கள் வானிடை இருக்கின்றன என்றும் இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது மட்டுமோடு இல்லாமல் இம்மண்டலங்கள், குளத்தில் தோன்றும் அலைகள் எல்லாத்திசைகளிலும் விரிவடைவது போல விரிந்துகொண்டே செல்கின்றன என்றும் அவ் விரிவின்வேகம் ஒளி அலைகளைவிட அதிகமானது என்றும் கண்டனர். விரிந்து செல்லும் இந்த அண்டத்தின் பரிதி வட்டத்தில் (circumference) ஓரிடத்திலிருந்து புறப் பட்ட ஒர் ஒளிக்கற்றை அந்த விளிம்பைச் சுற்றிக்கொண்டு மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்துசேர முற்பட்டால் அது இயலாது. சுற்றிவரும் ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 2,97,600 கிலோமீட்டர் வேகத்தில் தாவிச் செல்கிறது. அப்படியிருந்தும் இந்த ஒளி புறப்பட்ட இடத்தை அடைய முடியாமல் போவதற்கு ஒரேயொரு காரணந்தான் உண்டு. இந்த ஒளி செல்லும் வேகத்தைவிட அதிகமான வேகத்தில் அண்டத்தின் விளிம்பு விரிவடைகிறது. இதனை விரி வடையும் அண்டம் (Expanding Universe) என்று வானிய லார் கூறுவர். அண்டத்தின் விரிந்துசெல்லும் இந்த இயல்பை மணிவாசகப் பெருமான் பிறக்கம்’ என்ற சொல்லாலும், ‘விரிந்தன என்ற சொல்லாலும் கூறுகின்றார். மேலே கூறியுள்ள இந்த வானியற்கருத்தை மனத்துள் வாங்கிக் கொண்டு திரு அண்டப்பகுதியின் முதல் -:ԱIll அடிகளையும் காணலாம். அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெரும் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன