பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூன்முகம் 9 'நீத்தல் விண்ணப்பம்’ போன்ற பகுதிகளாகும். 'காதலிக்கு, நோக்குவ எல்லாம் அவையே போறல்' (தொல்:பொரு-கள-9) என்று சொல்வார்கள். அதுபோலக் குழந்தைகள் விளையாடுகின்ற அம்மானை, ஊசல் ஆகிய விளையாட்டுக்களிற்கூட, இறைவன் புகழைப் பரப்புகின்ற, அனுபவத்தைக் கூறுகின்ற பாடல்கள் அமையக் காண்கிறோம். - திருவாசகத்தின் முற்பகுதியில் சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், திரு அண்டப்பகுதி, போற்றித் திருஅகவல் ஆகிய நான்கு அகவல்கள் இடம் பெற்றுள்ளன. சிவபுராணம் அனுபவப் பிழிவு என்று சொல்லலாம். கீர்த்தித் திருஅகவல் பழங்காலத்தில் வழங்கி, இன்று மறைந்துபோன பல செவிவழிக் கதைகளை எடுத்துச் சொல்கின்ற பகுதியாகும். இறைவன் திருவிளையாடல் களில் பல இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. திரு அண்டப்பகுதியில் மாபெரும் கல்வியாளர்கள் 20ஆம் நூற்றாண்டில் கண்ட விஞ்ஞானப் புதுமைகளைப் போகிற போக்கில் சொல்லிச்செல்கிறார். இதைவிடச் சிறப்பு என்னவென்றால், இவ்விஞ்ஞானப் புதுமைகளை இறைவன் திருவருளோடு சேர்த்துக் கூறியதாகும். தேவாரத்தைப் போன்று பத்துப் பாடல்கள்கொண்ட பதிகம் என்ற அளவில் இவை அடங்கவில்லை. ஒவ்வொரு தலைப்பிலும் அவருடைய அனுபவம் விரிகின்ற நிலையைப் பொறுத்து பத்துப் பாடல்களாகவோ, அதிகமாகவோ, குறைந்தோ அமைந்துள்ளதைக் காண முடிகின்றது. - - என்ன காரணத்தினாலோ திருவாசகத்திற்கு உரை எழுதக்கூடாது என்ற எண்ணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை இருந்து வந்துள்ளது. தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையரின் நண்பராக இருந்த பூவாளுர் தியாகராயச் செட்டியார் திருவாசகத்திற்கு