பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 171 இல் நுழை கதிரின் துன்அனுப் புரையச் சிறியஆகப் பெரியோன். (1-6) எந்த ஒரு பொருளைப் பார்க்கும் பொழுதும் மனிதர்களுக்கு முதலில் தோன்றுவது அதனுடைய துரல வடிவாகும். கண்ணுக்குரிய பணிகளில் பருமையை முதலில் பார்ப்பதும் அடுத்து மிகநுண்ணிய பொருள்களை நோக்குவதும் இயல்பாகும். சாதாரண அறிவு உடைய வர்கள் இந்தப் பரந்த உலகத்தைக்கண்டு அத்தோடு நிறுத்திக் கொள்வர். கூர்மையான அறிவு உடையவர்கள் அப்பரந்த உலகையும் அதனுள் காணப் பெறுகின்ற பல்வேறு பொருள்களையும் காண்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இவற்றிடையே ஏதேனும் தொடர்பு இருக்குமோ? என்ற ஆராய்ச்சியில் செல்கின்றனர். பருப் பொருள்கள் தம்முள் மாறுபட்ட வடிவுடையவை. ஆயினும் இப் பருப்பொருள்களிடையே ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டனர். இந்த ஆராய்ச்சியில் அறிவு செல்லச்செல்ல பருப்பொருள்களின் தோற்றத்தைச் சிந்திக்கத் தொடங்கினர். நுண்ப்ொருள்கள் பலகடித்தான் பருப்பொருள் வடிவம் பெறுகிறது என்பதையும் பழைய மனிதர்கள் கண்டனர். மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் திருவருள் பெறுகின்றவரை பொறி கள், புலன்கள், கல்வி, அறிவு என்பவற்றின் உதவியால் இவ்வுலகை ஏனையோர்போலவே கண்டு வந்துள்ளார். திருவருள் கிடைத்தபின்னர் இதே கண்களால் பொருள்களைக் கண்டாலும் அவற்றில் காணப்பெறும் வேற்றுமை மறைந்து அனைத்தும் மூலப் பரம்பொருளின் பல்வேறு வடிவங்களே என்ற உண்மை புலப்படலாயிற்று. சிறியது, பெரியது என்ற சொற்கள் தனிப்பட்ட பொருளை உடையன அல்ல. இவை ஒப்புநோக்குச் சொற்கள். தனியாக ஒரு பொருளை எடுத்துவைத்துக் கொண்டு இது சிறியது அல்லது பெரியது என்று கூறுதல்