பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 173 கட்புலன், கற்பனை ஆகிய இரண்டுக்கும் அப்பாற் பட்டு விரிந்து கொண்டிருக்கும் அண்டம் பருமைக்கு எல்லையாகக் காட்டப்பட்டது. ஒளிக்கற்றையுள் தோன்றும் இச்சிறுதுகள் சிறுமைக்கு எல்லையாகப் பக்கத்தேவைத்துப் பேசப்படுகிறது. இது என்ன விந்தை; திருவாதவூரர் விஞ்ஞானப் பாடம் சொல்லித் தருகிறாரா? பின்னர் ஏன் இந்த விளக்கம்? சற்று நின்று நிதானித்தாற்றான் சிறியவாகப் பெரி யோன்’ என்ற தொடரின் பொருளைப் புரிந்துகொள்ள முடியும். இப்பொழுது மூன்று பொருள்கள் பேசப்பெறு கின்றன. கூர்ந்து கவனித்தால்மட்டும் கட்புலனாகும். சிறுதுகள் ஒன்று, கற்பனைக்கு அடங்காமல் விரிந்துநிற்கும் பேரண்டம் இரண்டு; சொல், கண், மனம், கற்பனை ஆகிய அனைத்தையும் கடந்து இப்பேரண்டத்தை தன்னுள் ஒரு சிறு துகளாக வைத்துக்கொண்டிருக்கும் இறைவடிவம் மூன்று. இப்பொழுது ஒன்று, இரண்டு, மூன்று என்ற வரிசையில் கண்டால் ஒன்றைவிட ஒன்று பெரியது என்று. சொல்லத் தோன்றுகிறது. அடுத்து, மூன்று, இரண்டு, ஒன்று என்றுபார்த்தால் ஒன்றைவிட ஒன்று சிறியது என்று சொல்லத் தோன்றுகிறது. இந்த மூன்றையும் வைத்துக் கொண்டு இறைவனின் பருமைக்கு ஒரு புதிய விளக்கம் தருகிறார் அடிகளார். இறைவன் எவ்வளவு பெரியவன் தெரியுமா? எந்தப் பேரண்டத்தைக் கண்டு இதன்பருமை அளவிடமுடியாதது என்று கருதுகிறோமோ அந்தப் பேரண்டம் இறைவனோடு ஒப்பிடும்பொழுது மிகச் சிறியதாகிவிடுகிறது. எவ்வளவு சிறியது தெரியுமா? ஒளிக்கற்றையில் காணப்படும் மிக நுண்ணிய துகளைவிட இப் பேரண்டம் சிறுத்து விடுகிறது. இதனைப் புரிந்து கொள்வது ஒரளவு கடினமென்பதால் மற்றோர் உதாரணத்தின் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் கடுகைவிட பூசணிக்காய் பெரியது தான். ஆனால் இமயமலையோடு ஒப்பிடும்போது.