பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருவாசகம் - சில சிந்தனைகள் இதுவரை பெரிது என்று கருதிக் கொண்டிருந்த பூசணிக் காய் கடுகைவிடச் சிறுத்துவிடுகிறது. இறைவனோடு ஒப்பிடும்பொழுது இப்பேரண்டமும் சிறுத்துத்தான் போய்விடுகிறது. ஆனால் எவ்வளவு சிறுத்தது என்று ஒப்பிடுவதற்கு ஒன்றைச் சொல்லியே ஆகவேண்டும். அதற்காகவே அடிகளார் துன் அணுவைக் கூறுகின்றார். இறைவனோடு ஒப்பிடும்பொழுது இப்பேரண்டம் துன் அணு'வைவிடச் சிறியது என்று சொல்வதன் மூலம் இறைவனின் பருமை பேசப்படுகிறது. வானவெளியில் பல்லாயிரங்கோடி கிலோமீட்டர் களுக்கு அப்பாலும் உள்ள பல்வேறு கோள் மண்டலங்கள் அனைத்தையும் சேர்த்து அண்டப்பகுதி என்றார். 'உண்டைப் பிறக்கம்’ என்று அடிகளார் கூறுவது இன்றுள்ள நாம் வியந்து, புருவங்களை மேலுயர்த்தி மெய்மறந்து நிற்கச் செய்யும் சொற்களாகும். விண்ணில் காணப்படும் கோள்களை உண்டை (Sphere) என்ற சொல்லினால் எட்டாம் நூற்றாண்டிலேயே குறிப்பிட்டது நம்மை மேலும் வியக்கச் செய்கிறது. விண்வெளியில் காணப்பெறும் இந்த உண்டைகள் விரித்துகொண்டே செல்கின்றன என்ற கருத்தை 'பிறக்கம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார். ஆக, இந்த உண்டைகள் ஓயாது சலித்துக் கொண்டிருக்கின்றன என்பதும் ஒன்றைவிட்டு ஒன்று பல்வேறு கோணங்களில் பிரிந்து செல்கின்றன என்பதும் பிறக்கம் என்ற சொல்லால் பெறவைக்கப்படுகிறது. இனி ஒன்றனுக்கு ஒன்று நின்று எழில் பகரின் என்று சொல்வது சிந்திக்கத்தக்கது. விரிந்து செல்கின்றன என்று முன்னே கூறியதால் இந்த உண்டைகள் எவ்விதக் கட்டுப்பாடும் சட்டதிட்டமும் இன்றித் தறிகெட்டு ஒடு கின்றன என்று பொருள்செய்ய ஏதுவாகப் பிறக்கம் என்ற சொல் இருத்தலின், அதனை மறுத்து இவ் விரிவிலும் ஒரு