பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருவாசகம் - சில சிந்தனைகள் மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும் சூக்கமொடு துலத்துச் சூறை மாருதத் தெறியது வளியிற் கொட்கம் பெயர்க்குங் குழகன்.......................... (6-12) உலகிடை வாழும் நாம் விண்ணிடை அண்ணாந்து பார்க்கும் பொழுதெல்லாம் உண்டைகள் நூற்றொரு கோடியின் மேற்படக் காணப்பெற்று விரிந்து செல்கின்றன என்பதை அறிகின்றோம். நம்மையும் அறியாமல், இவற்றைப் படைத்தவர் யார்? அந்தரத்தில் இவற்றை நிறுவியவர் யார்? பலயுகங்களாக இவை இருந்து வருகின்றனவே இவற்றைக் காப்பவர் யார்? காலாத் தரத்தில் இவை அழிந்து விடுகின்றனவே இவற்றை அழிப்பவர் யார்? போன்ற வினாக்கள் அவற்றைக் காணும் நம்மனத்திடைத் தோன்றுவது இயல்பே. இதற்கு விடை கூறுவதுபோலப் பின்வரும் தொடர்கள் அமைந்து $ (ዥðíàዥ. மலரிடைவாழும் நான்முகனும், திருமாலும் முறையே இப்பிரபஞ்சத்தைப் படைத்தலையும், காத்தலையும் செய் கின்ற கர்த்தாக்கள் ஆவர். பிரபஞ்சத்தில் காணப்படும் பல்வேறு உண்டைகளும் இவ்வுலகம்போன்ற பல்வேறு உலகங்கள் ஆகலின் அவற்றைப் படைத்தல், காத்தலாகிய இருதொழிற்கும் நான்முகனும், திருமாலும் தேவைப் பட்டனர். ஊழி என்று சொல்லப்படுவது ஒரு குறிப்பிட்ட உண்டை மறைவதற்குரிய காலமாகும். அந்த உண்டை யைப் பொறுத்தமட்டில் அதிலுள்ள நிலையியல் பொருள் கள், இயங்கியல் பொருள்கள், உயிர்கள் ஆகியவை மட்டும் அழிதலை ஊழி (பிரளயம் என்றும்; அவற்றைப் படைத்த நான்முகன். காத்த திருமால் ஆகியோரும் சேர்ந்து அழிதலை மாப்பேருழி (மகாப் பிரளயம் என்றும் கூறுகிறார் அடிகளார். ஒவ்வோர் உண்டைக்கும் ஒரு நான்முகனும், ஒரு திருமாலும் உண்டு என்பது சைவர்கள்