பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 177 கொள்கை. அந்த உண்டையோடு அவர்களும் அழிதலின் அவற்றைக் கூறவந்த திருநாவுக்கரசர். நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாரயணர் அங்ங்னே ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே (திருமுறை 5-100-3) என்று பாடிச் செல்கிறார். விண்ணிற்காணும் உண்டைகள், அவற்றிடையுள்ள உயிர்கள், அவற்றைப் படைத்துக் காக்கும் நான்முகன் நாரணர் அனைவரையும் சூறாவளிக் காற்றில் எறியப்படும் பொருள்களைப்போல மாப்பேர் ஊழியில் அழிக்கின்றவன் இறைவன் ஒருவனே என்றார்.

                • s a se sa er ..........முழுவதும்

படைப்போன் படைக்கும் பழையோன் படைத்தவை காப்போன் காக்குங் கடவுள் காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள் திருத்தகும் அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும் விடு பேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையுங் கிழவோன்.......... . (12-19) சரம், அசரம் ஆகிய அனைத்தையும் படைப்பவன் நான்முகன்தான் என்றாலும் பல்லாயிரக்கணக்கான நான்முகர்களை மாப்பேரூழிதோறும் படைக்கின்றவன் சிவபெருமான் ஆதலால் படைக்கின்ற அவனைப் பழையோன் என்றார். அதேபோல ஆயிரக்கணக்கான நாரணர்களையும் படைக்கும் கடவுள் என்றார். இவ்வாறு கூறியதால் மும்மூர்த்திகள் என்ற எண்ணம் தோன்றவே அழிக்கும் செயலைச் செய்கின்ற உருத்திரன் பற்றி என்ன கூறுகிறார் என்ற சிந்தனை மனத்தில் தோன்றுமன்றோ? அவ்வினாவிற்கு விடை கூறுவார்போல உருத்திரன் என்ற