பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 திருவாசகம் - சில சிந்தனைகள் தெய்வத்தைக் கருதாமல், அழிக்கின்றவன் சிவபெருமான் ஒருவனே என்ற கருத்தைப் பேசுகிறார். 'கரப்பவை கருதாக் கருத்துடைக் கடவுள்' என்றமையின் தனக்கு ஆற்றல் இருக்கின்றது என்ற காரணத்தால் தன் விருப்பம் போல அழித்தல் தொழிலைச் செய்யாமல், உயிர்கள் ஒய்வு பெறவேண்டிய காலத்தை அறிந்து அவற்றை அழிக்கின்றான் என்பதாம். ஆறுவகைச் சமயம் என்று பேசப்பெறும் சமயங்கள், வெவ்வேறு பெயர்களில் தத்தம் தெய்வங்களைக் கூறிற்றேனும் அப் பெயர்கள் அனைத்திற்கும் இடந்தந்து நிற்பவன் சிவனாகிய கிழவோன்(தலைவன்). இத்தொடரின் இறுதியிலுள்ள விண்ணோர் பகுதி என்ற சொற்களைக் 'கீடம் புரையும்’ என்பதனோடு சேர்க்கவேண்டும். அதாவது அறுவகைச் சமயத்தோர்க்கும் தலைவனாக உள்ள இக்கிழவோனுடன் ஒப்பிடும்பொழுது தேவர் உலகத்தில் உள்ளவர்கள் (விண்ணோர்பகுதி) புழுவுக்கே ஒப்பார்கள்(கீடம் புரையும்) என்கிறார் அடிகளார். ---oo----to 4 o' --- ............... நாள் தொறும் அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு மதியில் தண்மை வைத்தோன் திண்திறல் தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் வானில் கலப்பு வைத்தோன் மேதகு காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்றுளன்று எனைப்பல கோடி எனைப்பல பிறவும் அனைத்துஅனைத்து அவ்வயின் அடைத்தோன்..... (19–28) சூரியனிடத்து ஒளியை வைத்தவனும், அழகிய - சந்திரனிடத்துக் குளிர்ச்சியை வைத்தவ்னும், வலிமை பொருந்திய அக்கினியினிடத்து வெம்மையை வைத்தவனும்