பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 179 நிலைபெற்றுள்ள ஆகாயத்தினிடத்து தம்முள் மாறுபடும் ஏனைய நான்கு பூதங்களும் தங்குமாறு செய்தவனும், சிறப்புப் பொருந்திய காற்றினிடத்து இயக்கத்தை வைத்தவனும், நீரினிடத்து இனியசுவையை வைத்தவனும், பூமியினிடத்து செறிவை வைத்தவனும் என்று கூறும் முறையில் ஒவ்வொரு பொருளும் ஒவ்வோர் இயல்பைப் பெற்று விளங்குமாறு செய்தவன் சிவனே ஆவான். பொறி, புலன்களால் உணரத்தக்கவை நான்கு பூதங்களே ஆதலால் அவ்வாறில்லாத ஆகாயம் என்ற ஐந்தாவது பூதம் இல்லை என்பாரை மறுப்பதுபோல பொய்தீர் வானம்’ என்றார். தம்முள் மாறுபடும் தீ, நீர் முதலிய நான்கு பூதங்களும் தங்குமிடம் ஆகாயமே என்ற கருத்தைக் கலப்பு வைத்தோன்’ என்ற தொடரில் குறித்தார். அன்றியும் ஊழிக்காலத்தில் இந்நான்கு பூதங்களும் தம்முடைய தனித் தன்மையை இழந்து ஒன்றுள் ஒன்று கலந்து ஐந்தாவது பூதமாகிய ஆகாயத்தினிடம் தங்கிவிடுகின்றன என்பது இற்றை நாளில் பலரும் ஏற்றுக்கொண்ட கொள்கையாகும். வானில் கலப்பு வைத்தோன் என்பதற்கு இத்தகைய பொருளையும் கொள்ளலாம். ஏழாவது அடியில் இருந்து இதுவரை இறைவனுடைய பல்வேறு வியத்தகு செயல்களை அடிகளார் விரிவாகப் பேசுகின்றார். பிரபஞ்சத்தைப் படைப்பவன், காப்பவன் ஆகிய இருவரையும் நியமித்து பேரூழியில் அவர்களையும் சேர்த்து அழித்துவிட்டு, தான் ஒருவனாய் நிற்பவன் சிவபெருமானே என்ற கருத்தில் பேசுகிறார். இனி அட்ட மூர்த்த வடிவில் இருப்பவன் அவனே என்பது நாவரசர் காலத்திற்கு முன்பிருந்தே சைவர்கள் கூறிவரும் கருத்து ஆகும். அக்கருத்திலிருந்து ஒரளவு மாறுபட்டு அருக்கனில் சோதி அமைத்தோன்' முதலான தொடர்களில் அடிகளார். பேசுகிறார். அட்ட மூர்த்தங்களில் பஞ்ச பூதங்களும், சூரிய, சந்திரர்களும் ஆகிய ஏழும் இம் மண்ணுலகில் காணப்படுகின்ற, அனுபவிக்கப்படுகின்ற