பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 திருவாசகம் - சில சிந்தனைகள் பொருள்களாகும். அன்றியும், சந்திரன் தேய்வதும் வளர்வதுமாகவுள்ள இயல்பை உடையவன். கதிரவன் மிகப் பெரிய ஒளிப்பிழம்பாயினும் அவனுடைய நடுப் பகுதியில் இருள் இருப்பது கண்கூடு. எனவே இக் குறையுடைய ஏழு வடிவங்களையும் இறைவனே என்று கூறுவதை அடிகளார் விரும்பவில்லைப் போலும். எனவே பழையகருத்திலிருந்து ஓரளவு மாறுபட்டு கதிரவனுக்கும், சந்திரனுக்கும் ஒளியைத் தந்தவன் அவனே என்றும், பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு இயல்பைத் தந்தவன் அவனே என்றும் கூறுகிறார். அமைத்தோன், செய்தோன், வைத்தோன், கண்டோன் நிகழ்ந்தோன், அடைத்தோன் என்ற சொற்களைப் பயன் படுத்துவதன் மூலம் இறைவனுடைய தலைமைத் தன்மை (கர்த்தத்துவம் பேசப்படுதலைக் கவனித்தல் வேண்டும். 经趁兹净参邸必峻够经总经兹........அஃதான்று முன்னோன் காண்க முழுதோன் காண்க தன்நேர் இல்லோன் தானே காண்க ஏனத் தொல்எயிறு அணிந்தோன் காண்க கானப் புலியுரி அரையோன் காண்க நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும் ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன் (28–34) மேலே கூறிய செயல்களைச் செய்தவன் யாரெனில் அவன் அனைத்திற்கும் பழைமை ஆனவன் என்பதை அறிக மாறுபட்டு நிற்கும் பொருள்களிடையே அப் பொருள்களின் முழுவடிவாய் இருப்பவன் அவனே என்பதை அறிக. தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்பது அறிக வெள்ளைப் பன்றியின் கொம்பை அணிந்தவன் என்க. புலியின் தோலை அரைக்கு அணிந்தவன் என்பதறிக முழு நீறு பூசியவன் என்பதறிக. இத்தகைய ஒருவனை, நினைக்குந்தொறும் நினைக்குந்தொறும் என் ஆற்றாமை மிகுதிப்படுதலைக்