பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 திருவாசகம் - சில சிந்தனைகள் உரை எழுதுவதைவிட காவேரியில் வீழ்ந்து இறப்பதே மேல் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதனைப் பார்க்கும்போது, மேலே கூறிய கருத்து வலுப்படுகிறது. என்றாலும், ஆழ்ந்து நோக்கினால் திரு. செட்டியார் அவர்கள் கூற்று எவ்வளவு ஆழமுடையது என்பதை அறிய முடியும். ஏனையோர் பாடல்களைப்போலப் பதவுரை, பொழிப்புரை, தேமாங்காய், புளிமாங்காய் என்று சொல்லும் பகுதிகள் அனைத்தும் திருவாசகத்திற்கு உண்டு. என்றாலும், அதில் கவனம் செலுத்தினால் 'திருவாசகம் அனுபவப் பிழிவு என்பதை மறந்துவிட நேரிடும். பதவுரை, பொழிப்புரை போன்றவை அறிவின் துணைக் கொண்டு செய்யப்பெறும் செயல்களாகும். அறிவை மூட்டை கட்டி வைத்துவிட்டு மனத்தில் தோன்றும் உணர்வுகளுக்கே முழுவதுமாக இடம் கொடுத்து, திருவாசகத்தில் புகுந்தால் அந்த அனுபவத்தில் சிறு துளியேனும் பெறமுடியும். இந்த ஆழ்ந்த கருத்தில்தான் செட்டியார் அவர்கள் அப்படிக் கூறியிருக்க வேண்டும். நம்மை அஞ்ஞானிகள் என்று அழைத்துக்கொண்டு, தம் சமயத்தைப் பரப்ப மேல்நாட்டிலிருந்து வந்த ஜி.யு.போப், இது திருவாசகம் போன்ற ஒரு நூலை உலகில் எந்த மொழியிலும் இதுவரை கண்டது இல்லை’ என்று கூறுவாரேயானால், அது திருவாசகத்தின் உண்மை அனுபவத்தை அவர் பெற்றதன் பயனேயாகும். வள்ளலார், சிவப்பிரகாசர் போன்றவர்கள் இந்த அனுபவத்தில் ஒன்றுசேர்ந்து மாணிக்கவாசகர்பற்றியும், திருவாசகம்பற்றியும் பாடியுள்ளார்கள். ஆனால் எல்லோரும் திருவாசகத்தைப் படித்து அனுபவத்தைப் பெற முடியும் என்று கூறிவிட முடியாது. இந்த அனுபவத்தைப் பெறவேண்டுமானால் அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. இதை வள்ளற்பெருமான் நன்கு எடுத்துக்காட்டுகிறார். பாடுகின்ற நாம், பாடப்படுகின்ற