பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு அண்டப்பகுதி - சிந்தனைகள் 181. காண்க. இவ் ஆற்றாமையின் முடிவாக அவனோடு இரண்டறக் கலவாமல் தனித்துநின்று கவலையுறுதலின் 'கெடுவேன்’ என்றார். - - இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க (35–36) பருப்பொருளாகிய வீணையிடத்து நுண்மையான இன்னிசை மறைந்து நிற்பதுபோல உயிர்களினிடத்து நுண்மையான வடிவுடன் இசைந்துநிற்பவன் இறைவனே ஆவன். வீணையிடத்து மறைந்து நிற்கும் இசையை வீணை வாசிப்போன் வெளிக்கொணர்வதுபோல உயிருக்கு உள்ள ஆற்றலை அதனுள் மறைந்து நிற்கும் இறைவன் அவ்வப் பொழுது வெளிக்கொணர்கிறான் என்க. பரமன் காண்க பழையோன் காண்க பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க அற்புதன் காண்க அநேகன் காண்க (37–39) எல்லாவற்றையும் கடந்துநிற்பவன் ; எல்லாவற்றுக்கும் முன்னரே உள்ளவன்; நான்முகனும் (அறிவாலும்) திருமாலும் (செல்வத்தாலும் காணமுடியாதவன்; கற்பனை கடந்து நிற்கின்ற சிறப்புடையவன்; மாறுபட்ட, முரண் பாடுடைய பொருள்கள் அனைத்திலும் நிறைந்து நிற்பவன். சொல்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையில் படுவோன் காண்க ஒருவன் என்னும் ஒருவன் காண்க - விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க (40-44) சொல்லினால் குறிக்க முடியாத இயல்பையுடைய பழைமையோன் என்பது ஒருபொருள். சொல்லும் பொருளுமாக உள்ளவன் உமாகாந்தன் என்று கூறப்படும் நிலையை மாற்றி, சொல்வடிவாக நிற்றலேயன்றி அச்சொல்