பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 திருவாசகம் - சில சிந்தனைகள் தோன்றுவதற்கும் மூலகாரணாமாகவுள்ள பழைமையோன் என்ற பொருளையும் கொள்ளலாம். புறமனம், அகமனம், மேல் நிலைச் சித்தம் என்பவைபோக ஆழ்நிலைச் சித்தத்தாலும்கூட எட்ட முடியாதவன். சித்தத்தால் எட்ட முடியாதவனே ஆயினும் அன்பர்களின் பக்தி என்ற வலையினுள் தானே வந்து அகப்படுபவன். இவ்விரு தொடர்களிலும் கூறப்பட்ட பொருளைச் சற்று நின்று நிதானித்து சிந்தித்தல் வேண்டும். செல்லாச் சேட்சியன்’ என்பதும் வலையிற் படுவோன்’ என்பதும் முரண்பட்ட பொருளைத் தருவனபோல் தோன்றினும் சொல் ஆட்சியை நன்கு கவனித்தால் முரண்பாடில்லை என்பது நன்கு விளங்கும். சித்தமும் செல்லா என்பதால் தேடிச் செல்லும் முயற்சி சித்தத்தைப் பொறுத்ததாகி விடுகிறது. அதாவது அவனைக் காணவேண்டும் என்ற பெரு விருப்பால் உந்தப்பெற்று மனத்தைக் கடந்து நிற்கின்ற சித்தத்தின் ஆழ்நிலைப் பகுதியின் உதவிகொண்டு தன்முயற்சியால் தேடிச் செல்வதை சித்தமும் செல்லா என்ற தொடர் குறிக்கின்றது. இரண்டாவது தொடரில் வலையிற் படுவோன் என்பது பக்தருடைய முயற்சியைக் குறிக்கவில்லை. இவனுடைய பக்தி வலை விரிய விரிய கருணை காரணமாகச் சேட்சியன் தானே வந்து வலையிற் படுகிறான். இந்த இரண்டு தொடர்கள் மூலம் தேடிச் செல்வதற்கும், அமைதியாகப் பக்தி வலை விரிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை அறிவிக்கின்றார். சித்தம் தேடிச் செல்லும்போது செல்கிறேன் என்ற தன் முனைப்பு வெளிப்படுதலைக் காணமுடியும், அம்முனைப்பு இருத்தலால் அவன் சேட்சியன் ஆகிவிட்டான். பக்தி வலை விரிப்பவன் தன்முனைப்பை அறவே துறந்த நிலையில் உள்ளவனாத்லால் இறைவன் தானே வந்து அவ்வலையிற் படுகிறான் என்கிறார். இக் கருத்தையே நானேயோ தவஞ்செய்தேன்’ (திருவாச : 88-10) என்ற பாடலில் சிவபெருமான் தானே வந்து எனது உள்ளம்